பறந்து கொண்டிருந்த விமான கதவு திறந்தது: 180 பேர் பலி
நைரோபி:
பறந்து கொண்டிருந்த ராணுவ விமானத்தின் பின் பக்கக் கதவு திறந்து கொண்டதால் சுமார் 180 வீரர்கள், விமானத்தில் இருந்து தூக்கிஎறியப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் இச் சம்பவம் நடந்தது. இனப் போரில் சிக்கித் தவித்து வரும் இந்த நாட்டு ராணுவ விமானங்கள் சரியாகப்பராமரிக்கப்படுவதில்லை. இதனால் ரஷ்யாவிடம் இருந்து தான் விமானங்களை வாடகைக்கு எடுத்து காங்கோ ராணுவம் இயக்கி வருகிறது.
அதே போல நேற்று முன் தினம் இரவு இலூசின்--74 ரக சரக்கு விமானத்தில் 200 வீரர்களும் அதிகாரிகளும் நாட்டின் கின்ஸாஸா நகரில்இருந்து லும்பாசி என்ற நகருக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது விமானத்தின் பின் பக்கக் கதவு திடீரென திறந்து கொண்டது.
இதனால் விமானத்தில் இருந்து காற்று படுவேகத்தில் வெளியேறியது. இதில் 180 பேரும் கதவு வழியாக உறிஞ்சப்பட்டு வெளியே தூக்கிஎறியப்பட்டனர். மீதமிருந்த 20 பேர் விமானத்தின் முன் பகுதிக்கு ஓடியதால் உயிர் தப்பினர்.
திறந்து கிடந்த கதவு காரணமாக விமானமும் தனது கட்டுப்பாட்டை இழந்தது. மிகுந்த சிரமத்துக்கிடையே அந்த விமானத்தை விமானிதரையிறக்கினார்.
இப்போது வெளியே விழுந்த வீரர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
இந்த ஆதி காலத்து இலூசின் விமானங்கள் மிகப் பெரியவை. 4 என்ஜின்கள் கொண்டவை. இதனை ரஷ்யா, சீனா தவிர இந்திய விமானப்படையும் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications