தேனியைக் கலக்கிய கன மழை
Subscribe to Oneindia Tamil
தேனி:
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்தது. பலத்த சூறாளிக் காற்று, இடி, மின்னலுடன் பெய்த கூடிய மழையால்மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த மழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நீடித்த மழை காரணமாக கண்மாய்கள்,குளங்கள் நிரம்பின.
இடி, மின்னலுடன் பெய்துள்ள இந்தமழை விவசாயிகளுக்கு பெரும் பலனைக் கொடுக்கும் என்று தெரிகிறது.
காற்றும் மிக பலமாக இருந்ததால் கூரை வீடுகள் சேதமடைந்தன. கோடை வெயில், காரணமாக வறண்டு போய்க்கிடந்த தேனி மாவட்டம்தற்போது குளுகுளுக்கிறது.












Click it and Unblock the Notifications