தனுஷ்கோடியில் பதுங்கி இருந்த 4 இலங்கைத் தமிழர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
தனுஷ்கோடி கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த 4 இலங்கைத் தமிழர்கள்கைது செய்யப்பட்டனர்.
தனுஷ்கோடி பகுதியில் நான்கு பேர் பதுங்கி பதுங்கிச் சென்று கொண்டிருந்தனர்.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்து 4 பேரையும் பிடித்து விசாரணைநடத்தினர்.
விசாரணையின்போது அந்த 4 பேரும் 3 மாதங்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து வந்தது தெரிய வந்தது.
அவர்களை பாஸ்போர்ட் சட்டத்தின்படி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications