திருச்சி நகை கடை அதிபரிடம் கொள்ளையடித்த டிரைவர் மும்பையில் சிக்கினான்
சென்னை:
திருச்சி நகைக்கடை அதிபரை சென்னையில் கடத்தி, அவடமிருந்து ரூ. 1.25 கோடி மதிப்பிலான தங்க, வைரநகைகளைக் கொள்ளையடித்து விட்டுத் தப்பிய டாக்சி டிரைவர் சீதாராமனை சென்னை போலீஸார் மும்பையில்கைது செய்துள்ளனர்.
திருச்சியைச் சேர்ந்த நகைக் கடை அதிபரான சுபாஷ்சந்த் ஜெயின் சென்னை வந்து நகைகள் வாங்குவது வழக்கம்.அதுபோலவே, சில வாரங்களுக்கு முன் சென்னை வந்த அவர் ரூ. 1.25 கோடி மதிப்பிலான நகைகளை வாங்கினார்.
அதன் பிறகு எழும்பூர் ரயில் நிலையத்துக்கு தனது நண்பரின் காரில் சென்றார். காரை ஓட்டிச் சென்ற டிரைவர்சீதாராமன் இந்த நகைகளைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டார்.
காருடன் ஜெயினை வேளச்சேரிக்குக் கடத்திச் சென்ற அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரைக் கத்தியால்குத்திவிட்டு நகைகளுடன் தப்பினார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட சீதாரமான் உள்ளிட்டவர்களைப் பிடிக்கதனிப் படைகள் அமைக்கப்பட்டன. போலீஸான் தீவிர தேடுதல் வேட்டையில், சீதாராமனின் இரண்டு சகோதரிகள்திருப்பூரில் பிடிபட்டனர்.
அவர்களிடம் சீதாராமன் கொடுத்து வைத்திருந்த ரூ. 75 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டன. அவர்கள்இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவான சீதாராமன் மும்பையில் பதுங்கியிருப்பதாக தமிழக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.இதையடுத்து மும்பையில் உள்ள கல்யாண் பகுதிக்கு எழும்பூர் குற்றப் பிரிவு உதவி ஆணையர் ஆறுமுகச்சாமிதலைமையிலான போலீஸ் படை விரைந்தது.
அங்கு பதுங்கியிருந்த சீதாராமனை மாறு வேடத்தில் சென்ற இந்த போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைதுசெய்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த நகைகளையும் மீட்டனர்.
இதையடுத்து சீதாராமனை விமானம் மூலம்சென்னை கொண்டு வந்தனர். இப்போது அவரிடம் விசாரணை நடந்துவருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications