பா.ஜ.கவில் திருநாவுக்கரசர் ஆதரவாளர்களுக்கு மறுவாழ்வு
சென்னை:
மத்திய அமைச்சர் திருநாவுக்கரசருடன் பா.ஜ.க.வில் சேர்ந்து பல காலம் ஆன நிலையில் தற்போது தான் அவரது ஆதரவாளர்களுக்குமுக்கியப் பொறுப்புகள் தரப்பட்டுள்ளன.
எம்.ஜி.ஆர். காலத்தில் தமிழகத்தில் கொடி கட்டிப் பறந்த திருநாவுக்கரசர் பின்னர் ஜெயலலிதாவை முதல்வர் பதவியில் அமர்த்தியதில்முக்கிய பங்கு வகித்தார். ஆனால், பின்னர் ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட அவர் எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கி பல காலம் நடத்திவந்தார்.
கடந்த ஆண்டு தான் கட்சியை பா.ஜ.கவோடு இணைத்தார். அவருடன் எம்.ஜி.ஆர். அதிமுகவைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகளும்பா.ஜ.கவில் இணைந்தனர். ஆனால், யாருக்கும் பதவிகள் தரப்படவில்லை.
நீண்ட நெடிய காத்திருப்புக்குப் பின்னரே திருநாவுக்கரசருக்கு மட்டும் மத்திய அமைச்சர் பதவி தரப்பட்டது. மற்ற எம்.ஜி.ஆர். அதிமுகவினர்பா.ஜ.கவில் ஒதுக்கியே வைக்கப்பட்டிருந்தனர்.
இதனால் திருநாவுக்கரசர் அதிருப்தியில் இருந்தார். அவரை சமாதானப்படுத்த புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டத் தலைவர்பதவிகளில் திருநாவுக்கரசரின் ஆதரவாளர்களை டெல்லி பா.ஜ.க. தலைமை நியமித்தது.
இந் நிலையில் தற்போது நடந்து முடிந்த கட்சியின் மாநிலத் தேர்தலில் திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் முக்கிய பொறுப்புகளைப்பிடித்துள்ளனர்.
மாநில பா.ஜ.க. தலைகளையும் மீறி பிரதமர் வாஜ்பாயின் ஆதரவுடன் தனது ஆதரவாளர்களுக்கு முக்கிய கட்சிப் பதவிகளைப் பெற்றுள்ளார்திருநாவுக்கரசர்.
திருநாவுக்கரசரின் ஆதரவாளர்களில் மிக முக்கியவரான நடிகை லதா பொதுக்குழு உறுப்பினர் ஆக்கப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர். அதிமுகஅவைத் தலைவராக இருந்த முனு ஆதி, மாநில பா.ஜ.க. துணைத் தலைவராக்கப்பட்டுள்ளார்.
சென்னை நகர பா.ஜ.க. தலைவராக நா.சே. ராமச்சந்திரன் நயமிக்கப்பட்டுள்ளார். இவரும் திருநாவுக்கரசரின் ஆதரவாளர்தான். அதேபோல,இன்னொரு ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ. மூக்கன், தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்குத் தலைவராக்கப்பட்டுள்ளார்.
எம்.ஜி.சி.சுகுமார் கலைப் பிரிவு தலைவராக்கப்பட்டுள்ளார்.
என்ன தான் தேசியக் கட்சி என்று கூறிக் கொண்டாலும் தமிழக பா.ஜ.கவில் சாதிச் சண்டை பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.குறிப்பாத முற்பட்ட இனத்தினருக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இடையே பனிப் போர் தொடர்ந்து நடந்துகொண்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் மெதுவாக திருநாவுக்கரசர் அணியில் சேர்ந்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications