சிகிச்சை செய்யாததால் காலை இழந்த சிறுவன்
ஈரோடு:
அரசு டாக்டர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன்காலை இழந்தான்.
தமிழகம் முழுவதிலும் அரசு டாக்டர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தம் காரணமாக நோயாளிகள்பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் விபத்தினால் காயமடைந்து கொண்டுவரப்பட்ட இளைஞர் இளையராஜா டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை செய்யாத காரணத்தினால் உயிரிழந்தார்.
இந் நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்காதகாரணத்தால் அவனது கால் பறிபோயுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த பொன்ராஜ் என்ற சிறுவன் காலில் பலத்தகாயத்துடன் அனுமதிக்கப்பட்டிருந்தான்.
அவனுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய டாக்டர்கள் வராத காரணத்தால் காலில் சீழ் கட்டிக் கொண்டது. இதையடுத்துஅவன் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவனது காலை துண்டித்தால் மட்டுமேஉயிரைக் காப்பாற்ற முடியும் என டாக்டர்கள் கூறிவிட்டனர்.
இதையடுத்து அவனது ஒரு கால் துண்டிக்கப்பட்டது. உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் இவன்ஊனமானதைத் தடுத்திருக்க முடியும் என தனியார் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications