மாறனை சந்திக்க அமெரிக்கா சென்றார் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அமெரிக்காவில் ஹூஸ்டன் நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய அமைச்சர் முரசொலிமாறனைச் சந்திக்க திமுக இளைஞரணிச் செயலாளர் மு.க. ஸ்டாலின் இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் மாறன் ஹூஸ்டன் நகர மெதாடிஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெறறுவருகிறார். அவரது உடல் நிலை இன்னும் முழு அளவில் தேறவில்லை. அவரைச் சந்திக்க யாரும்அனுமதிக்கப்படவும் இல்லை.

திமுக தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரான எஸ்றா சற்குணம் சமீபத்தில் அமெரிக்கா சென்றபோதுமாறனைச் சந்திக்க முயன்றார். ஆனால், அவரைச் சந்திக்க மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை.

இந் நிலையில் ஸ்டாலின் இன்று அதிகாலை 3 மணி விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அவரால்மாறனைச் சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை. மாறனின் குடும்பத்தினர் மாறி, மாறி அமெரிக்காசென்றவண்ணம் உள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதியும் அமெரிக்கா சென்று மாறனைச் சந்திக்க விரும்பினார். ஆனால், அவரது உடல் நிலைஅதற்கு இடம் தராது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதையடுத்துத் தான் ஸ்டாலினை அனுப்பிவைத்துள்ளதாகத் தெரிகிறது.

சமீபத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை நேரில் சந்தித்துப் பேசினார் ஸ்டாலின். விரைவில் ஸ்டாலினைதிமுக தலைவராகவும் கருணாநிதி திட்டமிட்டுள்ளார். இந் நிலையில் அவரது அமெரிக்கப் பயணம் முக்கியத்துவம்பெறுகிறது.

அடுத்த மாதம் திமுக பொதுக்குழு:

இதற்கிடையே, திமுக பொதுக் குழுக் கூட்டம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று திமுக தலைவர்கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் 12-வது உட்கட்சித் தேர்தல் கிட்டத்தட்டமுடிவடைந்து விட்டது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொதுக்குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் ஜூன்மாதம் தல் வாரத்தில் நடைபெறவுள்ளது.

உட்கட்சித் தேர்தல் என்றாலே அதில் போட்டி தவிர்க்க முடியாததுதான். வெற்றி பெற்றவர்கள், தோல்விஅடைந்தவர்கள் என்று தனித்தனியாகப் பார்க்காமல் இருவரையும் ஒன்றாகவே நான் பார்க்கிறேன்.

இந்தத் தேர்தலின்போது சில பகுதிகளில் கட்சிக்குள் விரும்பத்தகாத சில நிகழ்வுகள் நடந்துள்ளன. (ஓட்டுக்காகஆள் கடத்தல், அடிதடி போன்றவை). இதுகுறித்து மிகுந்த மன வேதனையுற்றுள்ளேன். கட்சிக்கு சிறு ஊனம்ஏற்படுத்திய இவர்கள் மீது கண்டிப்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுக்களின்போது மோதும் இரு அணிகள் போலத்தான் இந்தத் தேர்தலில்போட்டியிட்டவர்களும். எனவே இந்த மோதலால் கட்சிக்கும், கட்சியின் ஜனநாயகத்திற்கும் ஊறு ஏற்படுத்தி விடவேண்டாம் என்று இவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அவர்.

தேர்தல் வரும்போது கூட்டணி: பா.ஜ.க

இதற்கிடையே இன்று சென்னை வந்த பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு, தமிழகத்தில் தேர்தல் நேரத்தில்தான் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்யப்படும். அதுவரை கூட்டணி குறித்து பேசவேண்டியதே இல்லை என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+