முகமூடி கொள்ளையர் அட்டகாசம்: பெண்ணை கத்தி முனையில் மிரட்டி, குழந்தையைக் கடத்திகொள்ளை
சென்னை:
சென்னை அருகே அனகாபுத்தூர் என்ற இடத்தில் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியும்,அவரது குழந்தையை கத்தி முனையில் தூக்கிச் சென்றும் கொள்ளையர்கள் நகை, பணத்தைத் திருடிச்சென்றனர்.
அனகாபுத்தூல் வசித்து வருபவர் ஜானகிராமன். இவரது மனைவி கிரிஜா. நள்ளிரவில் கிரிஜாவீட்டை விட்டு வெளியே வந்தார். வெளியே உள்ள டாய்லெட்டுக்குச் சென்றார்.
அப்போது ஒரு முகமூடி திருடன், கிரிஜாவின் கழுத்தில் கத்தியை வைத்தான். சத்தம்போட்டால்கொல்வேன் என மிரட்டி அவரை வீட்டுக்குள் இழுத்துச் சென்றான். உள்ளே நுழைந்ததும் வீட்டில்இருந்தவர்களை அவனே சத்தம் போட்டு எழுப்பினான்.
அப்போது மேலும் 3 முகமூடிக் கொள்ளையர்கள் வீட்டுக்குள் அதிரடியாய் நுழைந்தனர்.
கிரிஜாவையும் வீட்டினரையும் ஒரு அறைக்குள் தள்ளிய கொள்ளையர்கள் அதைவெளிப்பக்கமாகப் பூட்டினர்.
பின்னர் நான்கு பேரும் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து உள்ளே இருந்த ரூ. 1.10 லட்சம் பணம்மற்றும் 6 பவுன் நகை ஆகியவற்றைக் கொள்ளைடித்தனர். இதையடுத்து கிரிஜாவின் கைக்குழந்தையைப் பறித்துக் கொண்டு வெளியே சென்றனர்.
சப்தம் போட்டால் குழந்தையை கொன்று விடுவோம் என மிரட்டிவிட்டுச் சென்றனர்.
இதையடுத்து அந்தக் குழந்தையை 2 தெரு தள்ளி ரோட்டிலேயே போட்டு விட்டு கொள்ளையர்கள்தப்பிச் சென்றனர்.
தகவல் அறிந்ததும், செங்கை கிழக்கு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சங்கர் விரைந்துவந்து விசாரணை நடத்தினார். கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications