சவுதி குண்டு வெடிப்புகளில் 91 பலி: 9 இந்தியர்கள் காயம்
ரியாத்:
சவுதி தலைநகர் ரியாதில் அல்-கொய்தா அமைப்பினர் நடத்திய 9 தற்கொலைத் தாக்குதல்களில் 91 பேர்உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்த எண்ணிக்கையின் அளவு மேலும் அதிகமாக இருக்கலாம்எனவும் கூறியுள்ளது.
ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கை 29 தான் என சவுதி கூறியுள்ளது. இதில் 9 பேர் தற்கொலைத் தாக்குதல்நடத்திய தீவிரவாதிகள் எனவும் அந் நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால், உடைந்து கிடக்கும் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ள உடல்களின் எண்ணிக்கை தெரியவில்லை என்றுகூறியுள்ளது. அதே போல காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 50ல் இருந்து 200 ஆக உயர்ந்துவிட்டது. இதில்9 பேர் இந்தியர்களாவர். இவர்களில் அகமத் முனீர் என்பவர் மட்டும் மிக பலத்த காயமடைந்துள்ளார்.
நேற்று முன் தினம் இரவு அமெரிக்கர்கள் அதிகம் வசிக்கும் பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் மீது அல்-கொய்தாதீவிரவாதிகள் கார்களில் குண்டுகளை நிரப்பிக் கொண்டு வந்து தாக்குதல் நடத்தினர். கிட்டத்தட்ட 9 கார்கள் இதற்குபயன்படுத்தப்பட்டன.
தாக்குதலில் பல மாடிக் கட்டடங்கள் சிதைந்து உருக்குலைந்துள்ளன. 50க்கும் மேற்பட்ட கார்களும் சிதைந்துள்ளன.தாக்குதல் நடத்திய 9 பேரும் கார்கள் வெடித்துச் சிதறியதில் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவலின் வருகையையொட்டி இத் தாக்குதல் நடத்தப்பட்டது.ஆனாலும் அவர் திட்டமிட்டபடி சவுதி வந்தார். சிதறிக் கிடந்த கட்டட இடிபாடுகளை அவர் நேரில்பார்வையிட்டார்.இதற்கிடையே இந்தத் தாக்குதல் குறித்து விசாரிக்க அமெரிக்க எப்.பி.ஐ. படையினர் சவுதி விரைந்துள்ளனர். இதுபோன்ற மேலும் பல தாக்குதல்கள் நடக்கலாம் என்று தெரியவந்துள்ளதால் சவுதியில் உள்ள தனது தூதரகஊழியர்களின் பெரும்பாலானவர்களை உடனே நாடு திரும்புமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications