தமிழகத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்: சென்னை மாநகராட்சி கமிஷ்னர் விஜய்குமார்
சென்னை:
தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு ஐ.ஜியாக அனூப் ஜஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளராக இருந்து வந்த ரவி, விருதுநகர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
இரண்டாவது பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்த தேன்மொழி, பெரம்பலூர் மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி கமிஷனர் மாற்றம்:
இதுதவிர ஏராளமான ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில்
சென்னை மாநகராட்சியின் கமிஷ்னர் கலைவாணனும் அடங்குவார். அவருக்குப் பதிலாக புதிய கமிஷ்னராக விஜயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் பிறகு இதுவரை மொத்தம் 8 முறை சென்னை மாநகராட்சி கமிஷ்னர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
டேனிடா சுகாதாரத் திட்ட இயக்குனராக இருந்து வந்த விஜயக்குமார், கமிஷ்னராகவும் இதுவரை கமிஷ்னராக இருந்து வந்த கலைவாணன் டேனிடா திட்ட இயக்குனராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விஜயக்குமார், தன்னை இப்பொறுப்பில் நியமித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக சொன்னார்.
சென்னை மாநகராட்சிக்கு நியமிக்கப்பட்ட ஆணையர்கள் ஒவ்வொருவரும் ஒரு விதமான சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். இந் நிலையில் நிதானப் போக்குடன் செயல்படும் விஜயக்குமார் புது ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications