கொலை வழக்கில் தலைமறைவான மணமகன் கைது: திருமணம் நின்றது

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

கொலை வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த நபரை போலீஸார் கைதுசெய்தனர். அவருக்கு கல்யாணம் நிச்சயமாகி இருந்த நிலையில், கைது செய்யப்பட்டலா திருமணம் நின்று போனது.

தஞ்சாவூர் ஜவுளி செட்டித் தெருவைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவருக்கும், அப்துல்காதர் என்பவருக்கும் கடந்த1991ம் ஆண்டு நடந்த மோதல் ஏற்பட்டது. இதில் அப்துல்காதரை ரவிக்குமார் கொலை செய்தார்.

இதையடுத்து ரவிக்குமார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. தஞ்சாவூர் செஷன்ஸ்நீதிமன்றம் ரவிக்குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ரவிக்குமார் அப்பீல் செய்தார். அந்த விசாரணையின்போது அவர்நீதிமன்றத்திற்கு வரவில்லை இதையடுத்து அவரைக் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால்,ரவிக்குமார் தலைமறைவாகி விட்டார்.

இந் நிலையில், ரவிக்குமாருக்கும் திருவெறும்பூரைச் சேர்ந்த பெண்ணுக்கும் வரும் 19ம் தேதி திருமணம் நிச்சயம்செய்யப்பட்டது. ஆனால், ரவிக்குமார் ஒரு தண்டனைக் கைதி என்பதையும் தலைமறைவாக இருப்பதையும் பெண்வீட்டாரிடம் மறைத்துவிட்டனர்.

போலீசார் கண்ணில் இருந்து தப்ப திருமணத்தையும் திருச்சியில் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், இத் திருமணம் குறித்து போலீசாருக்கும் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து ரவிக்குமாரின் வீட்டைபோலீசார் கண்காணித்தனர். அப்போது இரவில் மறைந்து வீட்டுக்கு வந்த ரவிக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

இந்தத் தகவல் பெண் வீட்டாருக்குத் தெயவந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே திருமணத்தை நிறுத்திவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+