சசிகலாவுடன் தனி விமானத்தில் ஹைதராபாத் சென்றார் ஜெயாலலிதா
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தனது உயிர்த் தோழி சசிகலாவுடன் இன்று தனி விமானத்தில் ஹைதராபாத் புறப்பட்டுச்சென்றார்.
அவர் இரு வார காலம் அங்குள்ள தனது திராட்சை தோட்டப் பண்ணை இல்லத்தில் ஓய்வெடுப்பார் என்றுதெரிகிறது.
இன்று காலை 12.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சபாநாயகர் காளிமுத்து,அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். இதற்காக மருத்துவமாணவர்களுடன் பேச்சு நடத்திக் கொண்டிருந்த அமைச்சர் செம்மலையும் அதை பாதியில் விட்டுவிட்டு விமானநிலையம் வந்தார்.
அவரிடம் பேச்சுவார்த்தையின் விவரங்களை ஜெயலலிதா கேட்டறிந்த பின் விமானம் ஏறினார்.
முதலில் 14ம் தேதிக்குள் டான்சி தீர்ப்பு எந்த நேரமும் வரலாம் என்று டெல்லியில் இருந்து தகவல்கள் வந்தன.இதனால் தனது ஹைதராபாத் பயணத்தை சில நாட்கள் ஜெயலலிதா ஒத்தி வைத்திருந்தார். ஆனால்,நீதிமன்றங்களின் கோடை விடுமுறைக்குப் பின்னரே தீர்ப்பு வரும் என்று இப்போது தகவல்கள் வரஆரம்பித்துள்ளன. இதையடுத்து ஜெயலலிதா ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.
அடுத்த வாரம் உலக வங்கிக் குழு சென்னை வரும்போது ஜெயலலிதாவும் ஒரிரு நாட்கள் சென்னை வந்துவிட்டுமீண்டும் ஹைதராபாத் செல்வார் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications