ஜெலாட்டின் குண்டுகள் வெடித்து சிதறி 2 சிறுவர்கள் பலி: உடல்களை எரித்துவிட்டு பெற்றோர் தலைமறைவு
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே கிணறு தோண்டுவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஜெலாட்டின் வெடி குண்டுகள்வெடித்துச் சிதறியதில் 2 சிறுவர்கள் பலியாயினர். அவர்களின் உடல்களை, சிறுவர்களின் தந்தையேவயல்வெளியில் வைத்து எரித்துவிட்டுத் தலைமறைவாகிவிட்டார்.
பெரம்பலூர் அருகே உள்ள கண்ணீர்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன். இவர் கிணறுதோண்டுவதற்காக ஜெலாட்டின் வெடி மருந்துகளை வீட்டில் வைத்திருந்தார். அவர் இந்த குண்டுகளைவெடிபொருள்கள் கடையில் இருந்து உரிய முறையில் வாங்கவில்லை.
சட்டவிரோதமாக குண்டு தயாரிக்கும் கும்பல்களிடம் இதை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்திருந்தார்.
இந்த வெடி குண்டுளை எடுத்து அவரது மகன்களான முத்துசாமி, ரமேஷ் ஆகியோர் விளையாடிக்கொண்டிருந்தனர். அதற்கு பேட்டரி இணைப்பும் கொடுத்துள்ளனர். அப்போது அந்த குண்டுகள் பயங்கரமாகவெடித்துச் சிதறின.
இதில் இரு சிறுவர்களுமே உடல் சிதறி இறந்தனர். இதையடுத்து அந்த வீட்டை நோக்கி கிராம மக்கள் ஓடிவந்தனர். அப்போது வீட்டில் ஸ்டவ் வெடித்துவிட்டதாகக் கூறி மக்களை அங்கிருந்து விரட்டியடித்தார்ராஜேந்திரன்.
இதையடுத்து மகன்களின் உடல்களை வயலுக்குக் கொண்டு சென்ற ராஜேந்திரனும் அவரது மனைவிபெரியம்மாளும் அவற்றை எரித்துள்ளனர். பின்னர் இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.
இந் நிலையில் வயலில் இருந்து பிணங்கள் எரியும் வாடை வருவதைக் கண்ட மக்கள் ஓடிச் சென்று பார்த்தபோதுதான் உண்மை வெளியானது.
வெடிகுண்டுகளை வீட்டில் சட்ட விரோதமாக வைத்திருந்ததால் அது தொடர்பாக தான் கைது செய்யப்படலாம்என்று பயந்து தான் தனது மகன்களின் மரணத்தைக் கூட ஊராரிடம் மறைத்ததாகத் தெரிகிறது.
தலைமறைவாகிவிட்ட பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications