தமிழக- பாண்டி மாணவர்களின் ஒற்றுமை
பாண்டிச்சேரி:
பிளஸ் டூ தேர்வில் தமிழகத்தைப் போலவே, பாண்டிச்சேரியிலும், மாணவர்களை விட மாணவிகளே அதிகம்தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதே போல தமிழகத்தைப் போலவே அங்கும் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்த முறை பெருமளவில்சரிந்துள்ளது.
பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்திய பிளஸ் டூ தேர்வு முடிவுகளை மாநில கல்வி அமைச்சர் லட்சுமிநாராயணன் வெளியிட்டார். அவர் கூறுகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு 87.08 சதவீதமாக இருந்தது.
இந்த ஆண்டு, 16.17 சதவீதம் குறைந்து, 70.91 ஆக உள்ளது. (தமிழகத்திலும் 9 சதவீதம் சரிந்துள்ளது)பாண்டிச்சேரியில் 71.89 சதவீதம் பேரும், காரைக்காலில் 66.28 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 73.75சதவீத மாணவிகளும், 67.94 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கணிதத்தில் 12 பேர் மட்டுமே நூற்றுக்கு நூறு வாங்கியுள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு151 பேர் சென்டம்போட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இயற்பியலில் 8 பேரும் (கடந்த ஆண்டு20 பேர்), வேதியியலில் 10பேரும் (கடந்த ஆண்டு 19 பேர்) நூற்றுக்கு நூறு வாங்கியுள்ளனர்.
பாண்டிச்சேரி, லாஸ்பேட் புனித ஜோசப் கிளினி பள்ளி மாணவி சந்தியா 1182 மதிப்பெண்கள் பெற்றுமாநிலத்திலேயே முதல் மாணவியாக வந்துள்ளார்.
ராமதாஸ் பேரன்கள் சாதனை:தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் பா.ம.க. நிறுவனர் ராமதாசின் பேரன்கள் சாதனை படைத்துள்ளனர்.
திண்டிவனம் புனித அன்னாள் பள்ளியில் படித்து வந்த ராமதாசின் பேரன் பிரதீவன் மாவட்டத்திலேயே முதல்மாணவராக வெற்றி பெற்றுள்ளார். மூன்று பாடங்களில் 200க்கு 200 பெற்றுள்ளார். ராமதாசின் மகள் டாக்டர்ஸ்ரீகாந்தி- பரசுராமனின் மகன் இவர்.
அதே போல இன்னொரு பேரன் நிரஞ்சனும் 3 பாடங்களில் 200க்கு 200 பெற்றுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications