திருவாரூர், காரைக்காலில் பயங்கர சூறாவளி: 2 பேர் பலி
கடலூர்:
திருவாரூர், காரைக்கால், கடலூர் பகுதிகளில் திடீரென பயங்கர சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது. இதில் 2பேர் பலியாயினர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு இந்த திடீர் கனமழை பெய்தது. காற்றும் மிக பயங்கரமாக வீசியது. இதில் திருவாரூரில் உள் 60ஆண்டுகள் பழைய லாட்ஜின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில் ராஜம்மாள் என்பவர் இடிபாடுகளில் சிக்கிஉயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மருத்துவமனகளில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல காரைக்கால் பகுதியிலும் கன மழையும் சூறாவளிக் காற்றும் வீசியது. இதில் ஒரு பெட்ரோல் பங்கின்மேல் கூரை சரிந்து விழுந்தது. அப்போது அங்கு பெட்ரோல் போட வந்த காரின் மீது இரும்புத் தூண் சரிந்தது.இதில் கார் அப்பளமாய் நொறுங்கியது. இதில் காரில் இருந்தவர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 3 பேர்படுகாயமடைந்தனர்.
இவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதே போல கடலூரில் வீசிய சூறாவளிக் காற்றில் அரசு பொருட்காட்சிக்கு அமைக்கப்பட்ட அரங்குகள பெரும்நாசமடைந்தன. பல லட்சம் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதோடு, 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கடலூரில் கோடை விழா நடந்து வருகிறது.இதையொட்டி அங்கு அரசு சார்பில் பொருட்காட்சிஅமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை திடீரென வீசிய சூறாவளிக் காற்றுக்கு பொருட்காட்சியில் அமைக்கப்பட்டஸ்டால்களின் கூரைகள் அனைத்தும் காற்றில் பறந்தன.
இரும்புக் கூரைகள் தாக்கியதில், 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் பல லட்சம் அளவுக்கு சேதம்ஏற்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications