இந்தியாவுக்கான புதிய பாகிஸ்தான் தூதர் நியமனம்
இஸ்லாமாபாத்:
இந்தியாவுக்கான புதிய பாகிஸ்தான் தூதராக ரியாஸ் முகமது கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் நல்லுறவுகளைத் துவக்குவது தொடர்பாக இரு நாட்டுபிரதமர்களும் சமீபத்தில் தங்கள் விருப்பங்களை வெளியிட்டனர். இதையடுத்து தூதரக ரீதியிலானஉறவுகளை மேம்படுத்தவும் இரு நாடுகளும் முடிவு செய்தன.
அதன்படி கடந்த 13ம் தேதி பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதராக சிவ்சங்கர் மேனன்நியமிக்கப்பட்டார். சீனாவுக்கான இந்தியத் தூதராக இருந்த அவரை பாகிஸ்தான் தூதராக நியமித்ததுமத்திய அரசு.
இதையடுத்து பாகிஸ்தானும் அதேபோலவே இந்தியாவுக்கான தூதரை நியமித்துள்ளது.சீனாவுக்கான பாகிஸ்தான் தூதராக இருக்கும் கான் தற்போது இந்தியத் தூதராகநியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் தூர்தர்ஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில் பாகிஸ்தான் பிரதமர் மிர் ஜாபருல்லா கான்ஜமாலி இதைத் தெரிவித்தார். அது பாகிஸ்தான் தொலைக்காட்சியிலும் நேற்று மாலை ஒளிபரப்புசெய்யப்பட்டது.
ஆனாலும் கானை இந்தியத் தூதராக நியமித்துள்ளது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றுபாகிஸ்தான் அறிவித்துள்ளது.
பாக்.கிலிருந்து 20 இந்தியர்கள் விடுதலை:
இதற்கிடையே பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 20 இந்தியர்கள் விடுதலைசெய்யப்பட்டு இன்று தாய் நாடு திரும்பினர்.
பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறி மொத்தம் 300 இந்தியமீனவர்களும், அத்துமீறி நுழைந்ததாக 22 இந்திய இளைஞர்களும் பாகிஸ்தான் கடற்படையினரால்பிடித்து சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து அவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டு வந்தது.இந்நிலையில் சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சமாதான முயற்சிகள் வலுப்பெற்றுவந்தன.
இதைத் தொடர்ந்து 322 இந்தியர்களையும் விடுதலை செய்வதாக ஜமாலி அறிவித்தார். அதன் முதல்கட்டமாக 14 இந்திய மீனவர்களும், 6 இந்திய இளைஞர்களும் இன்று காலை பஞ்சாப் எல்லையில்உள்ள வாகா பகுதி வழியாக இந்தியாவுக்குள் வந்தனர். அவர்களை எல்லைப் பாதுகாப்புப்படையினர் அன்புடன் வரவேற்றனர்.
இதேபோல் மற்ற 286 இந்திய மீனவர்களும், 16 இளைஞர்களும் விரைவில் விடுதலைசெய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications