மருத்துவக் கல்லூரி தொடங்க காஞ்சி மடத்துக்கு அனுமதி
மதுரை
மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தால் தனியார் மருத்துவமனைகளுக்குத்தான் அதிக பலன்கிடைத்துள்ளது என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், காஞ்சி மடத்தின் சார்பில் தனியார் மருத்துவக் கல்லூரி துவங்கும் திட்டத்தை கைவிட வேண்டும்என அவரிடம் மருத்துவ மாணவர்கள் மனு கொடுத்தனர்.
ராஜ் டிவி நிறுவனம் நன்கொடையாக வழங்கியுள்ள தங்கத் தாமரையை மதுரை மீனாட்சி அம்மன் கோவில்தெப்பக்குளத்தில் சங்கராச்சாரியார் மிதக்க விட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கொள்கைக்காக போராடுவது பாராட்டுக்குரியது. ஆனால் வீணாக போராடுவது தேவையற்றது. அரசாங்கம் தனதுகொள்கையில் உறுதியாக உள்ளது போலத்தெரிகிறது. மாணவர்களின் போராட்டம்தான் தேவையற்றதாகதோன்றுகிறது.
மக்கள் திரிசூலம் வைத்துக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. சீக்கியர்கள் கத்தி வைத்துக் கொண்டுள்ளார்கள்.அது அவர்களது மத அடையாளம். அதுபோலவே, திரிசூலம் நமது அடையாளம்தான். எனவே அதை வைத்துக்கொள்வதில் எந்தத்தவறும் இல்லை.
தலித்துகள் தனி மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். அவர்களும் இந்து மதத்தின் ஒரு அங்கம்தான். இதை தலித்மக்களிடையே சரியான முறையில் பிரசாரம் செய்ய வேண்டும் என்றார் அவர்.
மாணவர்கள் மனு:
இந் நிலையில் சங்கராச்சாரியைச் சந்தித்த மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள், தனியே மருத்துவக் கல்லூரிதொடங்கும் திட்டத்தைக் கைவிடுமாறு கோரி மனு கொடுத்தனர்.
தனியார் கல்லூரி தொடங்க காஞ்சி மடத்துக்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல அப்பல்லோ மருத்துவமனை, மீனாட்சி அறக்கட்டளை உள்பட இதுவரை 10 தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications