தனியே சந்தித்து பேசியதை கண்டித்ததால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

தனியே சந்தித்துப் பேசியதை உறவினர்கள் கண்டித்ததால், திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி தற்கொலை செய்துகொண்டது.

விழுப்புரம் அருகே உள்ளது தியாகதுர்கம். இப் பகுதியைச் சேர்ந்தவர் சீனுவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்தமகேஸ்வரிக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் தங்களது ஊருக்கு அருகே நடந்த கோவில் விழாவைக் காண இருவரும் சென்றனர். திருவிழாவைக்கண்டு களித்துவிட்டு வீடு திரும்பினர். வரும் வழியில் மகேஸ்வரியின் வீட்டுக்குப் பின்புறம் இருவரும் தனியேஅமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்த சிலர், மகேஸ்வரியின் தந்தை பெரியசாமியிடம் போய் புகார் கூறியுள்ளனர். இதையடுத்துபெரியசாமியும், உறவினர்கள் சிலரும் சேர்ந்து கொண்டு மகேஸ்வரியைக் கண்டித்துள்ளனர்.

திருமணம் செய்து கொள்ளப் போகிறவரை சந்தித்தற்காக திட்டி அவமானப்படுத்தியதால் மனவருத்தமடைந்தமகேஸ்வரி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இந்தத் தகவல் சீனுவுக்கு எட்டியது. அழுது புலம்பிய அவர், ஊர் ஏரிக்கரையில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டுத்தற்கொலை செய்து கொண்டார்.

இச் சம்பவம் தியாகதுர்கம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எதெற்கெடுத்தாலும் கட்டுப்பாடா?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+