அமைச்சரவை மாற்றம்: அத்வானி-வாஜ்பாய் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மத்திய அமைச்சரவையை மாற்றி அமைப்பது குறித்து துணைப் பிரதமர் அத்வானியுடன் பிரதமர் வாஜ்பாய் இன்றுநீண்டநேரம் ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து விவாதிக்க பிரதமரின் ரேஸகோர்ஸ் இல்லத்துக்கு அத்வானி இன்று காலை வந்தார். அவருடன்பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு, நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங்கும் வந்தார். ஒரு மணி நேரத்துக்கும்அதிகமாக அவர்கள் விவாதித்தனர்.

இந்த வார இறுதியில் மாற்றி அமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தாபானர்ஜி சேர்த்துக் கொள்ளப்படவுள்ளார். முன்பைப் போல ரயில்வேதுறை தான் என்று முரண்டு பிடிக்காமல்கொடுக்கும் பதவியை ஏற்க அவர் முன் வந்துள்ளார்.

இது தவிர மேலும் சில புதுமுகங்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று தெரிகிறது.

கூடுதல் துறைகள் வைத்திருக்கும் அமைச்சர்களிடம் இருந்து அவை பறிக்கப்பட்டு புதியவர்களிடம்தரப்படவுள்ளன.

முரசொலி மாறனின் வர்த்தகத்துறையை இப்போது தனியார்மயமாக்கல்துறை அமைச்சர் அருண்ஜேட்லிவைத்துள்ளார். இதை அவரிடம் இருந்து எடுத்து வேறோரு அமைச்சருக்கு தனிப் பொறுப்பாக வழஙக பிரதமர்விரும்புகிறார்.

அதற்குப் பதிலாக மாறன் திரும்பி வரும்போது வேறோரு துறையைத் தர பா.ஜ.க. தயாராக உள்ளது. ஆனால்,இதை திமுக ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இந்தத் துறை மாறனுக்குத் தான் ஒதுக்கப்பட வேண்டும்,அதுவரை வேறொரு அமைச்சர் அதை கூடுதலாக கவனிக்கலாம் என்று திமுக கூறுகிறது.

அதை டி.ஆர்.பாலுவிடம் கூட கூடுதல் பொறுப்பாகத் தரலாம் என திமுக கூறியுள்ளது. ஆனால், பாலுக்கு அவ்வளவுமுக்கியத்துவம் தருவதை முதல்வர் ஜெயலலிதா விரும்பமாட்டார் என அத்வானி நினைக்கிறார். இதனால் அதைபாலுவிடம் தர அவருக்கு விருப்பமில்லை.

நிதியமைச்சர் பொறுப்பில் உள்ள ஜஸ்வந்த் சிங் மீண்டும் தனக்கு விருப்பமான வெளியுறவுத்துறையைக் கேட்கிறார்.ஆனால், இப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை மீண்டும் நிதியமைச்சராக்கினால்அதற்கு சங் பரிவாரங்களிடம் இருந்து எதிர்ப்பு வரும் என்பதால் ஜஸ்வந்த் சிங்கை மாற்ற வாஜ்பாய்விரும்பவில்லை.

மேலும் காஷீரின் புதிய முதல்வர் முப்தி முகம்மத் சயீதுடன் மோத ஆரம்பித்துள்ளபரூக் அப்துல்லாவைடெல்லிக்குக் கொண்டு வந்துவிடவும் முயற்சிகள் நடக்கின்றன. ஆனால், அவர் வெளியுறவுத்துறை போன்றதுறையைக் கேட்பதால் சிக்ல் உள்ளது.

இந்த விவகாரங்கள் குறித்து இன்று பேசி ஒரு முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.

அடிக்கடி பிரச்சனையில் சிக்கும் விவசாயத்துறை அமைச்சர் அஜீத் சிங்கை பதவி நீக்கம் செய்யவும் பிரதமர் முடிவுசெய்துவிட்டதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+