நீர்மூழ்கிக் கப்பலில் தங்கப் போகும் பெர்னாண்டஸ்
டெல்லி:
நாட்டின் வரலாற்றிலேயே முதன்முறையாக பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஒரு நாள் முழுவதும்நீர்மூழ்கியிலேயே தங்கியிருந்து கடற்படை வீரர்களின் செயல்பாட்டை நேரில் பார்வையிட உள்ளார்.
ஒரு நாள் இரவு முழுவதும் அவர் கடலுக்கடியில் நீர் மூழ்கியிலேயே தங்குவார்.
இதுவரை எந்த அமைச்சரும் செய்யாத அளவுக்கு உலகின் மிக உயரமான போர் முனையான சியாசினுக்கு 31தடவை போய் வந்துள்ளார் பெர்னாண்டஸ். மிகக் கடினமான பனிச் சூழலில் பணியாற்றும் வீரர்களுக்கு போதியகருவிகளை அனுப்பத் தவறிய ஒரு அதிகாரியை சியாசினுக்கு டிரான்ஸ்பர் செய்து வீரர்கள் படும் கஷ்டத்தைநேரில் பார்க்கச் செய்தார்.
ராணுவ முகாம்களுக்குச் செல்லும்போது அமைச்சருக்குரிய விசேஷ உணவுகளை எல்லாம் புறக்கணித்துவிட்டுவீரர்களுடன் சேர்ந்து உணவருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் பெர்னாண்டஸ்.
இந் நிலையில் கடற்படையின் கிழக்கு கமாண்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஐ.என்.எஸ். சிந்த்வீர் நீர்மூழ்கியில் வரும்24ம் தேதி பயணம் செய்கிறார் பெர்னாண்டஸ். இரவு முழுவதும் அவர் நீர்மூழ்கியிலேயே இருப்பார். பாதுகாப்புக்காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த நீர் மூழ்கி செல்லும் பாதை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
நீர்மூழ்கியில் ஏறுவதற்கு முன் சேதுசமுத்திரப் பணிகளைப் பார்வையிடுவதற்காக கடலோரக் காவல் படையின்ஹோவர்கிராப்ட் கப்பலில் அவர் பாக் ஜலசந்திப் பகுதிக்குச் செல்லவுள்ளார். ஹோவர்கிராப்ட் ரக கப்பலில் பயணம்செய்யும் முதல் அமைச்சரும் இவர் தான்.
சமீபத்தில் துணைப் பிரதமர் அத்வானி ஐ.என்.எஸ். விராட் விமானம் தாங்கிக் கப்பலில் இரவு தங்கினார். இந்தவிமானம் தாங்கிக் கப்பலின் செயல்பாட்டை நேரில் பார்வையிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications