த.கிருஷ்ணன் கொலையில் மு.க.அழகிரி கைது: திருச்சி சிறையில் அடைப்பு
மதுரை:
முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மகன்மு.க.அழகிரி இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
தா.கிருட்டிணன் நேற்று காலை மதுரை கே.கே.நகரில் உள்ள அவரது வீட்டின் அருகே படுகொலைசெய்யப்பட்டார். திமுகவின் உட்கட்சித் தேர்தல் மோதலில் தான் அவர் கொல்லப்பட்டதாகக்கூறப்படுகிறது.
ஸ்டாலின் அணியைச் சேர்ந்த அவரை சிவகங்கை மாவட்டச் செயலாளராக வர விடாமல் தடுக்கஅழகிரி அணியில் தீவிரமாக முயன்றனர். ஆனால், அவருக்கு ஆதரவாகவே அதிக ஓட்டுக்கள்இருந்தன. இதனால் அவர் எப்படியும் வெற்றி பெற்றுவிடுவார் என்ற நிலை இருந்தது.
அதே போல மதுரை மாவட்டச் செயலாளர் பதவிக்கும் ஸ்டாலின் ஆதரவாளரானவேலுச்சாமியையே கொண்டு வர த.கிருட்டிணன் முயன்றுள்ளார். ஆனால், இதையும் அழகிரிதரப்பினர் எதிர்த்து வந்தனர்.
இதனால் கருணாநிதி தலையிட்டு தேர்தலே நடத்தாமல் யாரையாவது தேர்வு செய்யும் முயற்சியில்இறங்கினார். அப்போதும் கூட அழகிரிக்கு சாதகமான நிலையையே கருணாநிதி எடுத்ததாகத்தெரிகிறது. இதனால் ஸ்டாலின் தரப்பினர் விட்டுத் தர மறுக்கவே தேர்தல் நடத்திவிடுமாறுகருணாநிதி கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.
தேர்தல் நடந்தால் தா.கிருட்டிணன் வெல்வது உறுதி என்ற நிலையில் தான் அவர் கொல்லப்பட்டார்.
இதனால் இந்தக் கொலையில் அழகிரிக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில்அழகிரியைக் கைது செய்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
இன்று அதிகாலை 4.30 மணிக்கு மதுரை அழகப்பன் நகர் சத்யசாய் காலனியில் உள்ள அழகிரிவீட்டுக்கு போலீஸார் சென்றனர். த.கிருட்டிணனின் ஆட்களும் ஸ்டாலின் ஆதரவாளர்களும்தாக்கலாம் என்ற அச்சத்தில் அழகிரியின் வீட்டைச் சுற்றி நூற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்கள்இரவு முழுவதும் காவல் நின்றிருந்தனர்.
காலையில் போலீசார் சென்றவுடன் அவர்களுடன் திமுகவினர் வாக்குவாதம் செய்தனர். ஆனால்,அவர்களை சமாதானப்படுத்திய அழகிரி போலீஸ் வேனில் ஏறினார்.
பின்னர் தல்லாகுளம் காவல் நிநலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட அழகிரியிடம் சுமார் 1 மணிநேரம் விசாரணை நடந்தது. இதையடுத்து அவர் மதுரை 6-வது குற்றவியல் நீதிபதி வனிதாவின்வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் சந்தேகத்தின் பெயரில் அழகிரி கைது செய்யப்பட்டுள்ளதாகநீதிபதியிடம் போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து அடுத்த மாதம் 4ம் தேதி வரை அழகிரியைநீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் மதுரை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு இடமில்லைஎன்று அதிகாரிகள் தெரிவித்துவிட்டதாகக் கூறிய காவல் துறையினர் அவரை திருச்சி மத்தியசிறைச்சாலைக்குக் கொண்டு சென்றனர். காலை 9 மணியளவில் அவர் திருச்சி சிறையில்அடைக்கப்பட்டார்.
மதுரையில் அழகிரியை தங்க வைத்தால் அவர் உள்ளே இருந்தபடியே தனது ஆதரவாளர்கள் மூலம்நகருக்குள் கலாட்டா செய்யலாம் என்பதாலேயே அவரை திருச்சிக்குக் கொண்டு சென்றுவிட்டதாகக்கூறப்படுகிறது.
திருச்சி கொண்டு செல்லப்படும் முன் நீதிபதி வீட்டின் முன் நிருபர்களிடம் பேசிய அழகிரி, இந்தப்பொய் வழக்கை, நீதிமன்றம் மூலம் சந்திப்பேன் என்றார்.
அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302வது பிரிவின்படி கொலை வழக்கும், 120 பிரிவின்படிகிரிமினல் சதி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து திருச்சி சிறைக்குக் கொண்டு வரப்பட்ட அழகிரியைக் காண ஏராளமானதிமுகவினர் சிறை வாசலில் கூடியிருந்தனர். இதில் ஸ்டாலின் ஆதரவாளரான எம்.எல்.ஏ. அன்பில்பொய்யாமொழியும் அடக்கம். (திமுகவில் உட்கட்சிப் பூசல் இல்லை என்பதைக் காட்டுவதற்காகஇவரை சிறை வாசலுக்குச் செல்லுமாறு திமுக தலைமை கட்டளையிட்டதாகத் தெரிகிறது).
இவர் தவிர அழகிரி ஆதரவாளரான திருச்சி துணை மேயர் அன்பழகனும் ஆதரவாளர்களுடன்வந்திருந்தார்.
தா.கிருட்டிணன் கொலையால் மதுரையில் ஏற்பட்ட பரபரப்பு இப்போது அழகிரி கைது மூலம்மேலும் அதிகரித்துள்ளது. அழகிரியின் ஆதரவாளர்கள் அடிதடிக்கும் வெட்டு குத்துக்கும் பெயர்போனவர்கள்.
அழகிரிக்கு தலைவலி என்றாலே பஸ்ஸை எரிக்கும் ஆட்கள் இவர்கள். இதனால் இந்தக் கைதுகாரணமாக அவரது ஆதரவாளர்கள் கலவரம் செய்வதைத் தடுக்க மதுரை உள்பட தென்மாவட்டங்கள் முழுவதும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த முறை அழகிரி கைது செய்யப்பட்டபோது, 20க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் தீ வைத்துக்கொளுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றும் அழகிரியின் கைதை எதிர்த்து மதுரையில் அவரது ஆதரவாளர்கள் கல்வீச்சு மற்றும் கலாட்டாவில்ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இன்றும் அழகிரியின் கைதை எதிர்த்து மதுரையில் அவரது ஆதரவாளர்கள் கல்வீச்சு மற்றும் கலாட்டாவில்ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். கவுன்சிலர் உள்பட மொத்தம் 17 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications