தமிழகத்தில் வங்கிகள் மூடல்-- ஆட்டோக்கள் ஓடவில்லை
சென்னை:
பல்வேறு தொழிற்சங்கள் அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் வங்கிப்பணிகள் முழு அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆட்டோக்களும் ஓடவில்லை. மத்திய அரசுஅலுவலகங்களும் இயங்கவில்லை.
அதே நேரத்தில் இந்தப் போராட்டத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர வேறு கட்சிகள் ஆதரவு தரவில்லை.இதனால் மாநில அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படவில்லை. பஸ் போக்குவரத்தும்பாதிக்கப்படவில்லை.
ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மேற்கு வங்காளம், திரிபுராவிலும் கம்யூனிஸ்ட்கள் ஆதரவுநிறைந்த கேரளத்திலும் பந்த் முழு அளவில் உள்ளது. இங்கு இயல்பு வாழ்க்கை அடியோடு ஸ்தம்பித்துப்போயுள்ளது. இங்கு விமானத்துறை ஊழியர்களும் பணிக்கு வராததால் விமானப் போக்குவரத்தும் கூடபாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகத்தில் வங்கிகள் தான் முழு அளவில் அடைக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்ட் ஆட்டோ சங்கத்தினரும்இதில் பங்கேற்றுள்ளதால் ஆட்டோக்கள் பெரும்பாலும் இயங்கவில்லை.
பொதுத்துறை நிறுவனங்களான நெய்வேலி அனல் மின் நிலையமும் சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களும்இந்தப் போராட்டத்தால் பாதிக்கப்படவில்லை. கம்யூனிஸட் தொழிற்சங்க ஊழியர்கள் மட்டுமே இங்கு பணிக்குவரவில்லை. மற்றபடி பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளனர்.
அதே நேரத்தில் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் இந்தப் போராட்டத்துக்கு முழு ஆதரவு இருந்ததால் பணிகள்பாதிக்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் இன்சூரன்ஸ் நிறுவன அலுவலகங்களும் இயங்கவில்லை.
இதனால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படவில்லை. துறைமுகப் பணிகளும் பாதிக்கப்படவில்லை.
கோயம்புத்தூர், ஈரோட்டில் ஜவுளி ஆலைத் தொழிலாளர்களில் பெரும்பாலோனோர் பணிக்கு வந்துவிட்டதால்அங்கும் பந்தினால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஆனால், சுமார் 20 சதவீத ஜவுளி ஆலைகள்மூடப்பட்டுள்ளன. குறிப்பாக மத்திய அரசுக்குச் சொந்தமான ஜவுளி ஆலைகள் இயங்கவில்லை.
போக்குவரத்து பாதிப்பில்லை:
அகில இந்திய அளவில் இன்று நடக்கும் பொது வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் பஸ் போக்குவரத்துபாதிக்கப்படவில்லை என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இந்த வேலை நிறுத்தத்தில் தமிழகத்தில் பல்வேறு தொழிற் சங்கங்கள் கலந்து கொள்ளவில்லை. குறிப்பாகபோக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. எனவே தமிழகத்தில் பஸ்போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்றார்.
இந்த ஸ்டிரைக்கை ஒட்டி சென்னை அண்ணா சாலை மறியலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர்களும் கம்யூனிஸ்ட்கட்சியினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications