உங்களை கல்வி, சுகாதார அதிகாரியும் கைது செய்யலாம்!!
சென்னை:
பொது இடங்களல் "தம்" அடிப்பவர்களைப் பிடிக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கையில்இறங்கியுள்ளது. காவல் துறையினரைத் தவிர மேலும் 25 அரசுத் துறையினருக்கும் "தம்"அடிப்பவர்களைப் பிடிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனிச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இருப்பினும் பொது இடங்களில் புகை விடுவோரின் எண்ணிக்கைகுறைந்தபாடில்லை.
இவர்களைப் பிடிக்க வேண்டிய காக்கிச் சட்டைகள் அவர்களிடம் ரூ. 10, ரூ. 50 லஞ்சம் வாங்கிக்கொண்டு ஒதுங்கிக் கொள்கின்றன.
இதையடுத்து போலீசார் தவிர 25 வகை அரசு துறையினருக்கும் தம் அடிப்பவர்களைப் பிடிக்கும்அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அதிகாரிகள், மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், சுகாதார சேவைப் பிரிவின்இயக்குனர்கள், இணை இயக்குநிர்கள், நகராட்சி சுகாதார அதிகாரி, மருத்துவமனைக்கண்காணிப்பாளர்,
ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி, ரெசிடென்ட் மருத்துவ அதிகாரி, தாலுகா சுகாதாரமேற்பார்வையாளர், கம்யூனிட்டி ஹெல்த் நர்ஸ், செக்டார் ஹெல்த் நர்ஸ், கிரேட் 1, 1பி, 2 பிரிவுசுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார நர்ஸ்;
கல்லூரி முதல்வர்கள், தலைமை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், உதவிக் கல்விஅதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், தாலுகா வளர்ச்சி அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள்,தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கும் புகை பிடிப்பவர்களைப் பிடித்துகோர்ட்டில் நிறுத்தும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த 25 வகை அதிகாரிகளும், புகை பிடிப்பவர்களைப் பிடித்து, எழுத்துப்பூர்வமானபுகாருடன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கலாம்.
குற்றவாளிகளைப் பிடிக்கும்போது அவர்கள் ஏதாவது முரண்டு செய்தால், நடவடிக்கைக்கு குந்தகம்விளைவித்தால், போலீஸாரின் உதவியை நாடலாம் என்றும் தமிழக அரசின் சுகாதாரம் மற்றும்குடும்ப நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த வாரமே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது. பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ளஇடங்களில் 100 மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள கடைகளில், பீடி, சிகரெட், புகையிலை, ஜர்தா பீடாபோன்றவை இருக்கிறதா என்பதை கடைக்குள் சென்று சோதனையிடவும் இவர்களுக்கு அதிகாரம்வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, பொது இடங்களை பராமரிப்போர் தங்களது கட்டடத்திற்கு முன்பாக தமிழிலும்,ஆங்கிலத்திலும், இங்கு புகை பிடிக்கக் கூடாது, எச்சில் துப்பக் கூடாது, புகை பிடிப்பதும், எச்சில்துப்புவதும் தண்டனைக்குரியது என்று போர்டு எழுதி வைக்க வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications