கருணாநிதிக்கு எதிராக திமுகவினர் கோஷம்: துரைமுருகன் வழிமறிப்பு
கொம்புக்காரநேந்தல்:
கொலை செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் த.கிருட்டிணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த திமுக மூத்ததலைவர்களான துரைமுருகன், பொன்முடி ஆகியோருக்கு எதிராக திமுகவினரே கோஷங்கள் எழுப்பினர்.
கருணாநிதியையும் கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.
நேற்று மாலை மதுரையில் இருந்து அவரது சொந்த ஊரான கொம்புக்காரநேந்தலுக்குக் கொண்டு வரப்பட்டகிருட்டிணனின் உடலுக்கு ஆயிரக்கணக்கான திமுகவினரும் பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தந்தையின் மறைவுச் செய்தி கேட்டு அமெரிக்காவில் இருந்து புறப்பட்டுவிட்ட அவரது மகன் தொல்காப்பியன்இன்று மாலை தான் சென்னை வந்தடைவார் என்று தெரிகிறது. இதன் பின்னர் நாளை அவர்கொம்புக்காரநேந்தலுக்கு வந்தவுடன் கிருட்டிணனின் இறுதிச் சடங்குகள் நடக்கின்றன.
அதே போல அமெரிக்காவில் இருந்து திரும்பிக் கொண்டு மு.க. ஸ்டாலினும் அவருடேனயே நாளை காலைகொம்புக்காரநேந்தல் வந்தடைவார் என்று தெரிகிறது. ஸ்டாலினின் தீவிரமாக ஆதரவாளராக இருந்தவர்தா.கிருட்டிணன்.
இதற்கிடையே மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு இன்று காலை கொம்புக்காரநேந்தலுக்கு வந்து தா.கிருட்டிணனின்உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது கருணாநிதிக்கும் அழகிரிக்கும் எதிராக அங்கிருந்தவர்கள் கோஷம்எழுப்பினர்.
இதையடுத்து துரைமுருகனும் பொன்முடிவும் அங்கு வந்தபோது ஆவேசமடைந்த அந்த ஊர் மக்கள் அவர்களைத்தாக்க வந்தனர். பின்னர் அவர்களைத் திரும்பிப் போகச் சொல்லியும் சத்தம் போட்டனர். தொடர்ந்துகருணாநிதிக்கும் அழகிரிக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து அங்கிருந்த ஊர் பெரியவர்கள் மக்களை அமைதிப்படுத்தி அஞ்சலி செலுத்த அனுமதித்தனர்.
இதற்கிடையே ஸ்டாலின் மதுரை வரும்போது அவரது ஆதரவாளர்களுக்கும் அழகிரி ஆதரவாளர்களுக்கும்இடையே மோதல் வெடிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதைத் தவிர்க்கும் முயற்சிகளில் துரைமுருகனும்பொன்முடியும் ஈடுபட்டுள்ளனர். நேற்றிரவு முதல் இரு தரப்பையும் சேர்ந்த முக்கிய புள்ளிகளை அவர்கள் சந்தித்துப்பேசி வருகின்றனர்.
இன்று இரவே திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும், பொருளாளர் ஆற்காடு வீராசாமியும் மதுரை வந்துசேருகின்றனர். கருணாநிதியின் சார்பில் இவர்கள் இருவரும் நாளைய இறுதிச் சடங்கில் பங்கேற்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications