தா.கி. கொலை: பிள்ளையார் சுழியா? முற்றுப் புள்ளியா?
சென்னை:
மு.க.அழகிரி-.க.ஸ்டாலின் மோதல் உச்சகட்டத்தை எட்டியிருப்பதற்கு பிள்ளையார் சுழிதான்தா.கிருட்டிணன் படுகொலை என்று திமுக வட்டாரத்திலேயே கவலையுடன் பேசப்படுகிறது.
ஆனால் திமுக தலைவர் கருணாநிதி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்கின்றனர்.
திமுக என்பது ஒரே கட்சி என்றுதான் அதிகாரப்பூர்வமாக அறியப்படுகிறது. ஆனால் உண்மையில்,திருச்சிக்கு இந்தப் பக்கம் ஸ்டாலின் திமுக, அந்தப் பக்கம் அழகிரி திமுக என்று திமுகவைஇரண்டாகப் பிரித்துவிடலாம்.
இப்படிப் பிரிவினை தோன்றி 12 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. சென்னையில் அழகிரி-ஸ்டாலின் இடையே யார் பெரியவர் மோதல் வந்தபோது தான் மதுரையில் சில பிசினஸ்களைஆரம்பித்துக் கொடுத்து அழகிரியை அந்த ஊருக்கு குடும்பத்தோடு பேக்-அப் செய்தார் கருணாநிதி.
மதுரையில் பிசினஸை கவனித்தாரோ இல்லையோ அரசியலை நன்றாகவே நடத்தி வருகிறார்அழகிரி. இப்போது கருணாநிதியே தென் தமிழகம் வந்தாலும் அழகிரி சொன்னால் தான் உரியவரவேற்பு கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு கட்சியை தனது கட்டுப்பாட்டில்கொண்டு வந்துவிட்டார்.
இதை எதிர்த்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜனையே தேர்தலில் தோற்கடிக்கச் செய்தார். எம்.ஜி.ஆர்.காலத்திலேயே திமுக சார்பில் மதுரையில் வெற்றி பெற்ற சிலரில் ஒருவரான செ.ராமச்சந்திரனைமண் கவ்வ வைத்தார். அதே போல பொன்.முத்துராமலிங்கத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டார்.
இப்போது மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி என தெற்கேகன்னியாகுமரி வரை அழகிரி கையில் தான் திமுகவே உள்ளது. கடந்த தேர்தலில் வேட்பாளர்தேர்வில் தன்னிடம் ஆலோசிக்காமல் ஸ்டாலின் பரிந்துரைப்படி வேட்பாளர்களை கருணாநிதி தேர்வுசெய்ததால் தென் தமிழகத்தில் திமுகவினரை தேர்தல் வேலையே பார்க்க விடாமல் தடுத்தார் அழகிரி.
அத்தோடு ஆளும் கட்சியிடம் பல கோடிகளை வாங்கிக் கொண்டு திமுக வேட்பாளர்களுக்குஎதிராகவே திமுக தொண்டர்களை இறக்கிவிட்டதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு உணடு.
தென் மாவட்டங்களில் அழகிரியின் விரல் அசைவுக்குத்தான் திமுகவினர் ஒத்துழைக்கும் நிலைஉள்ளது. இதற்கு அவரிடம் உள்ள பணமும், கருணாநிதியுடன் அவருக்கு உள்ள செல்வாக்கும் தான்காரணம்.
இப்போது தென் மாவட்டங்கள் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் தனது செல்வாக்கைவிரிவாக்கும் வேலைகளில் அழகிரி ஈடுபட்டுள்ளார். இது ஸ்டாலின் வட்டாரத்தில் பெரும்அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருகிறது.
இந்த கோஷ்டி மோதல் கட்சியின் உட்கட்சித் தேர்தலில் பயங்கரமாக எதிரொலித்தது. ஆங்காங்கேமோதல் வெடித்தது. இதனால் அப்செட் ஆகிப் போன கருணாநிதி பலமுறை நேரில் தலையிட்டுஅமைதியை ஏற்படுத்தினார்.
ஆனால் மதுரை மாவட்ட நிர்வாகிகள் தேர்வில் ஏற்பட்ட மோதலை அவராலேயே சமாளிக்கமுடியவில்லை. இந்த நிலையில்தான் ஸ்டாலினை அமெரிக்காவுக்கு பேக் செய்தார் கருணாநிதி. இதன்பிறகாவது தீர்வு ஏற்படும் என்று கருதினார்.
ஆனால், அமெரிக்காவில் இருந்தபடி தனது ஆதரவாளர்களான தா.கிருட்டிணன், மதுரை மேயர்செ.ராமச்சந்திரன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மூலம் காய்களை நகர்த்தினார் ஸ்டாலின்.
இந் நிலையில் தான் தா.கிருட்டிணன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அவரைக் கொன்றது யார் என்று இன்னும் உறுதியாகத் தெரியாத நிலையில், மதுரை திமுகவில்வெடித்துக் கிளம்பியுள்ள கோஷ்டி மோதல் தான் அவரைப் பழிவாங்கியது என்பதில் யாருக்கும்சந்தேகமில்லை.
இந்த சந்தேகத்துக்கு உரமிடுவது போல தா.கியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அழகிரியோ அவரதுஆதரவாளர்களோ யாரும் வரவில்லை. மதுரை திமுக பொறுப்பாளர் காவேரி மணியம் மட்டுமேவந்திருந்தார்.
அழகிரி ஆதர்வாளர்களான முன்னாள் அமைச்சர் பொன்த்துராமலிங்கம், முன்னாள் மேயர்குழந்தைவேலு ஆகியோர் வரவில்லை.
தா.கி. படுகொலையால் கருணாநிதி மிகவும் வேதனை அடைந்திருப்பதாக ண்ணா அறிவாலயவட்டாரத்தில் கூறுகிறார்கள். கோஷ்டிப் பூசல் இந்த அளவுக்கு வளரும் என்று தான் நினைக்கவேஇல்லை என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கருணாநிதி வருத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தா.கி. படுகொலை கோஷ்டிப் பூசலுக்கு முற்றுப் புள்ளியாகவாவது இருக்க வேண்டும். இதை வளரவிட்டால் மேலும் பல சோகங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது போலாகி விடும்.
எனவே, பாசத்தை ஒதுக்கிவிட்டு இப்போதாவது கருணாநிதி சில கடுமையான நடவடிக்கைள்எடுத்து கட்சியைக் காக்க வேண்டும் என்று திமுகவினர் கவலையுடன் கோரிக்கை விடுக்கின்றனர்.
தா.கி. கொலைக்கு நிச்சயம் பழி வாங்குவோம் என அவரது வீட்டில் கூடிய ஸ்டாலின் ஆதரவு திமுகதொண்டர்கள் கோஷம் போட்டது தான் மதுரை போலீஸை வயிற்றைக் கலக்கியுள்ளது.
எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று தெரியாமல் இரு கோஷ்டிகளின் முக்கியத் தலைகளும்தங்களைச் சுற்றி எப்போதும் இருக்கும் ரவுடிகள், தாதாக்களின் எண்ணிக்கையை அதிகரித்துபாதுகாப்பை ஸ்டிராங் செய்து கொண்டுள்ளன.












Click it and Unblock the Notifications