இன்று ராஜீவ் நினைவு தினம்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீபெரும்புதூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 12வது நினைவு நாளையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் இன்றுஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

ஸ்ரீபெரும்புதூரில் தான் மனித வெடிகுண்டினால் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இங்குள்ள அவரதுநினைவிடத்தில் அணையாத ஜோதியும் உள்ளது. இங்கு தமிழக காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், செயல்தலைவர் இளங்கோவன், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இன்று அஞ்சலிசெலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியையொட்டி சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு வட சென்னை மாவட்ட காங்கிரஸ்தொண்டர்களால் பாதயாத்திரையாக ஜோதியும் கொண்டு வரப்படுகிறது. சென்னை கொருக்குப்பேட்டை ராஜீவ்காந்தி சிலையிலிருந்து இந்த பாதயாத்திரை கிளம்பியது. இதனை காங்கிரஸ் பொதுச் செயலாளர் வசந்தகுமார்தொடங்கி வைத்தார்.

அதே போல காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனிலும் ராஜிவின் உருவப் படத்துக்கு ஏராளமானோர்மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். சென்னை சின்னமலையில் உள்ள ராஜிவின் சிலைக்கு காங்கிரஸ் தலைவர்கள்மாலையணிவித்தனர்.

ராஜிவின் மறைவு தினம் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருவதால் தமிழக அரசின்தலைமைச் செயலகத்தில் பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அரசு ஊழியர்கள்பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சென்னை துறைமுகத்திலும் இந்த உறுதிமொழியேற்புநடந்தது.

இதே போல நாடு முழுவதுமே ராஜிவ் நினைவு தினம் காங்கிரஸ் தொண்டர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+