ஜெவின் செல்லக்குட்டி சாத்தான்குளத்தில் மகளிர் கல்லூரி தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

சாத்தான்குளம்:

முதல்வர் ஜெயலலிதாவின் "செல்லக்குட்டி"யான சாத்தான்குளத்தில் அடுத்த மாதம் முதல் மகளிர் கல்லூரிசெயல்படத் தொடங்குகிறது.

சாத்தான்குளம் இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது அத்தொகுதியில் மகளிர் கல்லூரி தொடங்கப்படும் என்றுஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன், சாத்தான்குளம் எனது செல்லக்குட்டிஎன்றும் வர்ணித்தார் ஜெயலலிதா.

பிரசாரத்தின்போது வாக்களித்தபடி, தற்போது அங்கு மகளிர் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலிமனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மகளிர் கல்லூரி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கல்லூரி அடுத்தமாதம் முதல் செயல்படத் தொடங்கும்.

கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பங்கள நேற்று முதல் வழங்கப்பட்டு வருகின்றன. புதிய கல்லூரிதற்போதைக்கு தற்காலிக கட்டடத்தில் இயங்கவுள்ளது.

புதிய கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகளும் ஆரம்பித்துவிட்டன. கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதும், கல்லூரிஅங்கு இடமாற்றம் செய்யப்படும் என அதிமுக எம்.எல்.ஏ. நீலமேகவர்ணம் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+