ஆடிட்டருக்கு பேக்ஸ் ஆன நிதியமைச்சக உத்தரவுகள்
சென்னை:
சென்னையில் செஞ்சி ராமச்சந்திரனுக்கு இடைத் தரகராக செயல்பட்ட ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்திக்கு நிதியமைச்சகத்தின் முக்கியடிரான்ஸ்பர் உத்தரவுகள் கூட பேக்ஸ் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
தன் மீதான குற்றசாட்டுகளை கிருஷ்ணமூர்த்தி மறுத்தாலும் அவர் வசமாக மாட்டியுள்ளார். இவர் மூலமாக செஞ்சிராமச்சந்திரனின் பி.ஏ. பெருமாள் சாமிக்கு லஞ்சம் கொடுத்த வருமான வரித்துறை அதிகாரி அனுராக் வர்தனின் டிரான்ஸ்பர் ஆர்டர்காப்பி இவருக்கு பேக்ஸ் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மிக முக்கிய துறையான நிதியமைச்சகத்தின் உத்தரவுகள் கூட இவருக்கு பேக்ஸ் செய்யப்பட்டுள்ளது சி.பி.ஐ.அதிகாரிகளுக்கே அதிர்ச்சியை அளித்துள்ளது.
டெல்லியில் உள்ள செஞ்சி ராமச்சந்திரனின் அலுவலகத்தில் இருந்தே இந்த டிரான்ஸ்பர் ஆர்டரை பெருமாள்சாமி பேக்ஸ் செய்துள்ளார்.மேலும் டெல்லியில் உள்ள அனுராக் வர்தனிடம் இருந்து கிருஷ்ணமூர்த்தி வந்த டெலிபோன்களும் காலர் ஐடி மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளன.
இந்த நெட்வொர்க் மிக professional ஆக நடந்துள்ளது என்கின்றனர் நம்மிடம் பேசிய சிபிஐ அதிகாரிகள். இதில்முக்கிய குற்றவாளி அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் தான் என்கின்றது சிபிஐ.
இதற்கிடையே நேற்று சி.பி.ஐயால் கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தியை டெல்லி கொண்டு செல்லநீதிமன்றத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இன்று சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவரை மேற்கொண்டு விசாரணைக்காக டெல்லிக்குக் கொண்டு செல்ல சிபிஐ அதிகாரிகள் அனுமதிகோரினர். இதற்கு நீதிபதி அனுமதி தந்தார். இதையடுத்து இன்றே அவர் டெல்லி கொண்டு செல்லப்படுவார் எனசிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications