டி.ஆர்.பாலு உத்தரவு: ஜெவுக்கு ஒரிஸ்ஸா முதல்வர் ஆதரவு?
சென்னை:
ராணிமேரிக் கல்லூரி இடிப்பைத் தடுக்க மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கொண்டு வந்தஅரசாணைக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு ஒரிஸ்ஸா முதல்வரின்ஆதரவும் கிடைக்கும் என்று தெரிகிறது.
கடலோரங்களில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டடங்களைப் பாதுகாக்கும் வகையில் ஒரு அரசாணையைபாலு வெளியிட்டார். அதில் கடலோரச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் கடற்கரையில் ரூ. 5 கோடிக்கு மேல்எந்தக் கட்டடம் கட்டினாலும் அதற்கு மத்திய அரசின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஜெயலலிதா கடிதம் எழுதினார். இந்த ஆணை மூலம் மாநிலஅரசின் அடிப்படை உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார். இதைஎதிர்க்க கடற்கரை மாநில முதல்வர் ஒன்று திரள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு முதலில் கேரள முதல்வர் ஆண்டனியிடம் இருந்து ஆதரவு கிடைத்தது. ஜெயலலிதாவுக்கு அவர் எழுதியகடிதத்தில் டி.ஆர்.பாலுவின் ஆணையை எதிர்ப்பதாகக் கூறியிருந்தார்.
இப்போது ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்கும் ஜெயலலிதாவுக்கு பதில் அனுப்பியுள்ளார். அதில், உங்கள்கடிதத்தில் உள்ள விவகாரம் குறித்து ஆலோசித்து வருகிறேன். மாநில அரசுகளின் உரிமைகள் மதிக்கப்படவேண்டும். விரைவில் இந்த விஷயத்தில் எனது முடிவைத் தெரிவிக்கிறேன் என்று கூறபபட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications