மிக பயங்கர வெயில்: வெந்து போன சென்னை!
சென்னை:
சென்னை நகரில் நேற்று வரலாறு காணாத வெயில் அடித்தது. கடும் வெயிலால் சென்னை மக்கள்வாடி, வதங்கினர். கடந்த 23 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 112 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
வழக்கமாகவே அதிக வெப்ப நிலையை சந்தித்து வரும் அரக்கோணத்தில் நேற்று 113 டிகிரி வெயில்அடித்தது.
சென்னை நகரில் கத்திரி வெயில் மிகவும் கடுமையாக உள்ளது. கடந்த சில நாட்களாக அனல்காற்று அடித்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு லேசான மழை பெய்தது. இருப்பினும் அடிக்கும்வெயிலைக் குறைக்க அது போதுமானதாக இல்லை.
இந் நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மிகவும் கடுமையாக வெயில் அடித்தது. கடந்த23 ஆண்டுகளில் நேற்று தான் மிக அதிகபட்சமான வெப்பம் நிலவியதாக வானிலை ஆராய்ச்சிநிலைய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
1910ம் ஆண்டில் மே 21ம் தேதி சென்னையில் 113 டிகிரி வெயில் அடித்தது. இதன் பின்னர் 1980ம்ஆண்டு மே 25ம் தேதி 112 டிகிரி வெயில் அடித்தது. இதுவரை இது தான் சென்னை நகரின்அதிகபட்ச வெப்பமாக இருந்தது.
ஆனால், நேற்று மீண்டும் 112 டிகிரி அளவுக்கு சுட்டெரிக்கும் வெயில் அடித்துள்ளது.
தெருக்களில் நடந்து சென்றவர்கள் மயங்கி விழும் நிலை ஏற்பட்டது. ரயில்களிலும் பஸ்களில்சென்றவர்கள் அனல் காற்றில் வறுபட்டனர். வீடுகளுக்குள் பேன் ஓடினாலும் வெப்பக் காற்று தான்வீசியது.
இதனால் உள்ளேயும் இருக்க முடியாமல் வெளியிலும் எட்டிப் பார்க்க முடியாமல் சென்னை மக்கள்பெரும் அவதிப்பட்டனர்.
நாட்டின் வட மேற்கு திசையில் இருந்து மிக உலர்ந்த அனல் காற்று தமிழகத்தை நோக்கி வீசிவருகிறது. இதனால் தான் வெப்ப நிலை அளவுக்கு மீறி உயர்ந்து வருவதாக நுங்கம்பாக்கம்வானிலை ஆராய்ச்சி நிறுவன அதிகாரியான ரவிக்குமார் கூறுகிறார்.
இன்னும் இரண்டு அல்லது 3 நாட்களுக்கு இந்தக் கடும் வெயில் தொடரும் என்றும் அவர்எச்சரித்துள்ளார்.
இதே போல தமிழகத்தின் மற்ற நகர்களிலும் கடும் வெப்பம் நிலவுகிறது.
100 டிகிரிக்கு மேல் அதிக அளவு வெப்ப நிலையை சந்தித்த பகுதிகள்:
அரக்கோணம்- 113 டிகிரி
பாண்டிச்சேரி- 110 டிகிரி
கடலூர்- 107 டிகிரி
வேலூர்- 106 டிகிரி
மதுரை- 105 டிகிரி
திருச்சி, சேலம், பாளையம்கோட்டை- 104 டிகிரி
நாகப்பட்டிணம்- 101
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications