சென்னையில் குடிநீரை விற்கும் மெட்ரோ வாட்டர்!
சென்னை:
ரூ. 600 கொடுத்தால் 9,000 லிட்டர் கொண்ட ஒரு டாங்கர் லாரி குடிநீர் விற்கப்படும் என்றுசென்னை குடிநீர் வினியோக வாரியம் (மெட்ரோ வாட்டர்) அறிவித்துள்ளது.
சென்னையில் கடும் வெயில் மட்டும் அடிக்கவில்லை, கடுமையான குடிநீர்ப் பஞ்சம்ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி வருகின்றனர். குடம் 2 ரூபாய் என்றஅளவில் விற்கப்பட்டு வருகிறது. காசு கொடுத்தாலும் பல இடங்களில் தண்ணீர் கிடைக்கவில்லை.
இதனால் ஒரு பகுதி மக்கள் அல்லது பிளாட்களில் வசிப்பவர்கள் ஒன்றாகச் சேர்ந்து தனியார் வாட்டர்சர்வீஸ் நிறுவனங்களிடம் வேன்கள், லாரிகளில் பணம் கொடுத்து நீரை வாங்கி வருகின்றனர்.
இப்போது இந்த தனியார் வாட்டர் சர்வீசுக்குப் போட்டியாக மெட்ரோ வாட்டர் நிறுவனமும் களத்தில்குதித்து நீரை விற்க முன் வந்துள்ளது.
ரூ. 600 கொடுத்து 9,000 லிட்டர் குடிநீரை வாங்கிக் கொள்ளலாம் என்று சென்னை மக்களுக்குமெட்ரோ வாட்டர் கூறியுள்ளது.
மெட்ரோ வாட்டர் நிறுவனத்தில் பணம் அல்லது காசோலை கொடுத்து இந்த டாங்கர் லாரி குடிநீரைப்பெற்றுக் கொள்ளலாம் என்றும் மெட்ரோ வாட்டர் அறிவித்துள்ளது.
தண்ணீர் வராவிட்டால் சேரிப் பகுதி மக்கள் நடுரோட்டில் இறங்கி போராடி தண்ணீர் லாரியை தங்கள் பகுதிக்குஎப்படியாவது வரவழைத்து விடுகின்றனர். அதே போல வசதி படைத்தவர்கள் காசு கொடுத்து ஒரு வேன் தண்ணீரைவாங்கிக் கொள்கின்றனர்.
ஆனால் நடுத்தர, கீழ் நடுத்தர மக்களின் நிலைமை தான் மிக மிக மோசமாக உள்ளது. இவர்கள் நம்பி இருப்பதுமெட்ரோ வாட்டர் லாரிகளைத் தான். இந்த லாரிகள் வாரத்துக்கு ஒருமுறை தான் வருகின்றன. மேலும் அவைஎப்போது வரும் என்றும் தெரியாது. சில நேரங்களில் நள்ளிரவில் வந்து கூட நீரை வினியோகிக்கின்றன.
கூடுதல் லாரிகளை வைத்து அதிக அளவில் நீரை வினியோக்கவும் அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இந் நிலையில் இப்போது மெட்ரோ வாட்டரே நிறுவனமே நீரை விற்க ஆரம்பித்துவிட்டது. இனி பணம்கட்டியவர்களுக்கு தண்ணீர் வினியோகத்தில் முன்னுரிமை தரப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications