ஜூன் 6ம் தேதி காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம்
டெல்லி:
காவிரிக் கண்காணிப்புக் குழுவின் கூட்டம் வரும் ஜூன் 6ம் தேதி டெல்லியில் நடக்கிறது.
மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் கோஸ்வாமி தலைமையில் நடக்கும் இக் கூட்டத்தில் தமிழக தலைமைச்செயலாளர் லட்சுமி பிரானேஷ் மற்றும் பொதுப்பணித்துறை, விவசாயத்துறைச் செயலாளர்களும் கலந்து கொள்வர்என்று தெரிகிறது.
அதே போல கர்நாடக, கேரள, பாண்டிச்சேரி தலைமைச் செயலாளர்களும், அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்கஉள்ளனர்.
வறட்சி காலத்தில் காவிரி நீரை தமிழகமும் கர்நாடகமும் எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது குறித்து இக்கூட்டத்தில் பார்முலாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்யும் என்று தெரிகிறது.
தனது 4 அணைக்கட்டுகளிலும் உள்ள நீரின் அளவைக் கணக்கிட்டு அதற்கேற்ப நீரைப் பகிர்ந்து கொடுக்கவேண்டும் என்று கர்நாடகம் கூறுகிறது.
ஆனால், தமிழகத்துக்குத் தர வேண்டியுள்ள நீரில் பாக்கி வைத்துள்ள நீரை வறட்சி காலத்தில் கர்நாடகம் தரவேண்டும் என தமிழகம் கோருகிறது.
கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்துக்கு கர்நாடகம் 16.5 டி.எம்.சி. நீர் மிச்சம் வைத்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது. இந்த நீரை வறட்சி காலமான இப்போது தர வேண்டும் என தமிழகம் கோருகிறது.
நதிகள் இணைப்பு சாத்தியமே: அத்வானி
இதற்கிடையே நதிகள் இணைப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழு, நதிகள் இணைப்பு சாத்தியம் தான்என அரசிடம் அறிக்கை தந்துள்ளது. இத் தகவலை துணைப் பிரதமர் அத்வானி இன்று நிருபர்களிடம்தெரிவித்தார்.
3 நாட்களுக்கு முன் நிபுணர் குழுவின் தலைவர் சுரேஷ் பிரபு தன்னைச் சந்தித்ததாகவும் அப்போது நதிகள்இணைப்பு சாத்தியம் தான் என்ற நல்ல தகவலைத் தந்ததாகவும் அத்வானி கூறினார். இதையடுத்து அந்தப் பணியில்தீவிரமாக இறங்கும்படி அவருக்கு நான் அறிவுறுத்தினேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications