திமுக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் விரைவில் கைது
ஈரோடு:
தி.மு.க. முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் விரைவில் கைது செய்யப்படலாம் என்றுதெரிகிறது.
இவர் வருமானத்தை மீறி பல கோடி ரூபாய் சொத்து சேர்த்திருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகலஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறுகின்றனர்.
கடந்த தி.மு.க ஆட்சியில் இவர் கைத்தறித்துறை அமைச்சராக இருந்தார்.
வருமானத்துக்கு மீறி சொத்து குவித்ததாக அந்தியூர் செல்வராஜ் உள்பட உள்ளிட்முன்னாள்அமைச்சர்கள் அன்பழகன், பொன்முடி, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி.மணி,என்.கே.கே. பெரியசாமி,
கே.என். நேரு, செங்குட்டுவன், தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி , மதுரைமுன்னாள் மேயர் குழந்தைவேலு உள்ளிட்ட தி.மு.க. முக்கியத் தலைவர்களின் வீடுகள், மற்றும்உறவினர் வீடுகளில் போலீஸார் அவ்வப்போது சோதனைகள் நடத்தி வருகின்றனர்.
ஆனால், இதுவரை யாரையும் கைது செய்யும் அளவுக்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இதனால்ரெய்டுகள் தான் தொடர்ந்து கொண்டுள்ளவே தவிர எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கமுடியாமல் லஞ்ச ஒழிப்புப் போலீசார் திணறி வருகின்றனர்.
இந் நிலையில் விரைவில் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஐ.ஜி.நாஞ்சில் குமரனுக்கு மேலிடத்தில் இருந்து நெருக்குதல் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் ரெய்டுகளை அவர் மேலும் அதிகப்படுத்தியுள்ளார். தினமும் யாராவது ஒரு திமுக தலைவர்வீட்டில் சோதனைகள் நடந்தபடி உள்ளன. பொதுப் பணித்துறை அதிகாரிகள் உதவியுடன்திமுகவினரின் வீடுகள், உறவினர்களின் வீடுகள் மதிப்பிடப்பட்டு வருகின்றன.
இதில் கைத்தறித்துறை அமைச்சராக இருந்த அந்தியூர் செல்வராஜ் விஷயத்தில் சில குறிப்பிடத்தக்கஆதாரங்கள் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது. அவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியும் எனபோயஸ் கார்டனுக்கு லஞ்ச ஒழிப்புப் போலீசார் தகவல் தந்துள்ளனர்.
இதையடுத்து இந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டு அந்தியூர் செல்வராஜைகைது செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அந்தியூர் செல்வராஜைத் தொடர்ந்து துரைமுருகன், கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம் கே.என்.நேரு ஆகியோரும் கைதாகலாம் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications