செஞ்சி ராமச்சந்திரன் வீட்டில் சிபிஐ சோதனை

Subscribe to Oneindia Tamil

செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்):

முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரனின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

நிதித்துறை இணையமைச்சராக இருந்த செஞ்சி ராமச்சந்திரனின் உதவியாளர் பாபு என்றபெருமாள்சாமி வருமான வரித்துறை அதிகாரியிடம் ரூ. 4 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும்களவுமாக பிடிபட்டார்.

இதைத் தொடர்ந்து தார்மீகப் பொறுப்பேற்று செஞ்சி ராமச்சந்திரன் தனது பதவியை ராஜினாமாசெய்தார்.

இந் நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்றுதிடீர் சோதனை நடத்தினர்.

கிருஷ்ணமூர்த்தியின் முக்கிய டைரி சிக்கியது:

இதற்கிடையே பெருமாள்சாமியுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட சென்னை ஆடிட்டர்கிருஷ்ணமூர்த்தியின் ரகசிய டைரியை சிபிஐ கைப்பற்றியுள்ளது.

இதன்மூலம் வருமானவரி அதிகாரிகள் இடமாறுதலில் நடந்த பல ஊழல்கள் குறித்து ரகசியங்கள்தெரிய வந்திருப்பதாக சிபிஐ கூறுகிறது.

சென்னையில் கைது செய்யப்பட்ட ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தி இப்போது டெல்லி சிபிஐய தலைமைஅலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். செஞ்சி ராமசந்திரனின் உதவியாளர்பெருமாள்சாமியும் சிபிஐயின் பிடியில் தான் உள்ளார்.

ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தியை அவரது சென்னை தியாகராய நகர் ராமசாமி தெருவில் உள்ள அவரதுவீட்டில் வைத்து தான் சி.பி.ஐ. கைது செய்தது. அப்போது அந்த வீட்டில் நடந்த சோதனையில் ரூ.69லட்சம் பணமும் , ரூ.85 லட்சம் மதிப்புள்ள வங்கிக் காசேலைகளும் கைப்பற்றப்பட்டன.

இந்தக் காசோலைகளும் பணமும் பெருமாள்சாமிக்கு சொந்தமானதல்ல, எனதுவாடிக்கையாளர்களுக்குச் சொந்தமானது என கிருஷ்ணமூர்த்தி சிபிஐயிடம் கூறி வருகிறார்.

நான் பல நிறுவனங்களுக்கு ஆடிட்டராக உள்ளேன், பல பெரிய பணக்காரக் குடும்பங்களின் கணக்குவழக்கைப் பார்க்கிறேன். அவர்களது காசோலைகள் தான் இவை என்று கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார்.

இதையடுத்து பெருமாள்சாமி மற்றும் கிருஷ்ணமூர்த்தி இடையிலான தொடர்பை வலுவாக நிரூபிக்கமுடியாமல் சிபிஐ திணறுவதாகத் தெரிகிறது.

இந் நிலையில் சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று முன்தினமும் ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில்2-வது முறையாக சோதனை நடத்தியுள்ளனர். இந்த விவரம் இப்போது தான் வெளியே வருகிறது.

சிபிஐ தென் மண்டல இயக்குனர் ஆர்.என்.சவானியின் தலைமையில் 10க்கும் மேற்பட்டஅதிகாரிகள் குழு சுமார் இரண்டரை மணி நேரம் அந்த வீட்டை சோதனையிட்டது.

அப்போது அங்கிருந்த 5 கம்ப்யூட்டர்களையும் அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். மேலும்சில செல்போன்களும் பிடிபட்டன.

ஆனால், சோதனையில் சிக்கிய முக்கியமான விஷயமாக ஒரு டைரியைச் சொல்கிறார்கள். அதைகிருஷ்ணமூர்த்தியின் ரகசிய டைரி என்று குறிப்பிடும் அதிகாரிகள், அதில் வருமானவரித்துறையினரின் இடமாறுதல்கள் குறித்து பல தகவல்கள் உள்ளதாகக் கூறுகின்றனர்.

வருமான வரி அதிகாரிகளின் மாறுதலுக்கு கிருஷ்ணமூர்த்தி பணம் வாங்குவதில்லையாம். மாறாககுறிப்பிட்ட வருமான வரி அதிகாரிகளிடம் தனது வாடிக்கையாளரின் வருமான வரி கணக்குகளைசரி செய்யச் சொல்வாராம். இதற்காக தனது வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கிக் கொள்வாராம்.

ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தியின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் சிபிஐ முடக்கிவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+