ராணி மேரிக் கல்லூரி பேராசிரியைகள் "தண்ணீர் இல்லா காட்டுக்கு" டிரான்ஸ்பர்!
சென்னை:
சென்னை ராணி மேரிக் கல்லூரி இடிப்பை எதிர்த்து மாணவிகளுடன் இணைந்து குரல் கொடுத்தபேராசிரியைகள் 7 பேர் பர்கூர், ராமநாதபுரம், பூலாங்குறிச்சி உள்ளிட்ட இடங்களுக்கு இடமாற்றம்செய்யப்பட்டனர்.
இடமாற்றம் செய்யப்பட்ட பேராசிரியைகள் தான் மாணவிகளின் ஸ்டிரைக்கைகுக்கு முழு ஆதரவாகஇருந்ததாக அரசு கருதுகிறது. இதனால் பழிவாங்கும் விதத்தில் இவர்கள் டிரான்ஸ்பர்செய்யப்பட்டுள்ளனர்.
முதல் கட்டமாக 3 பேராசிரியைகள் பர்கூர், ராமநாதபுரம், பூலாங்குறிச்சி கல்லூரிகளுக்குஇடமாற்றம் செய்யப்பட்டனர். அதற்கு அடுத்த கட்டமாக நேற்று 4 பேர் சென்னை நந்தனம் மற்றும்வட சென்னை அரசு கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நீண்ட தொலைவில் உள்ள ஊர்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பேராசிரியைகள் மற்றும்மாணவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை எதிர்க் கட்சியினரை பழிவாங்கி வந்த அரசு இப்போது கல்லூரி பேராசிரியர்களையும்பழிவாங்க ஆரம்பித்துவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியக்களின் இடமாற்றங்களை கவுன்சிலிங் மூலம்செய்யும் முறையை தமிழக அரசு கடந்த ஆண்டுதான் அறிமுகப்படுத்தியது.
யாருக்கு எந்த ஊர் வேண்டும் என்று கேட்டு இந்த டிரான்ஸ்பர்கள் செய்யப்பட்டன.
அப்படி இருக்கும்போது அரசே தனது விதியை மீறி பேராசிரியைகளை இடமாற்றம் செய்துள்ளதுஆச்சரியம் தருகிறது.
கல்லூரி, ஆசிரியர்கள், கல்வி, மாணவர்கள், பள்ளி இவற்றின் மீதெல்லாம் அதிமுக அரசுக்குஎன்னதான் கோபமோ தெரியவில்லை.
தடைக்கு எதிராக மத்திய அரசு மனு:
இதற்கிடையே கடலோரங்களில் உள்ள பழமை வாய்ந்த கட்டடங்களை இடிக்கத் தடை விதிக்கும் மத்திய சுற்றுச்சூழல்துறையின்உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
ராணி மேரிக் கல்லூரி இடிப்பைத் தடுக்கவே மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் டி.ஆர். பாலு இந்த உத்தரவைப் பிறப்பித்ததாகதமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. இந்த உத்தரவை ரத்து செய்யவும் கோரியது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு இது குறித்து விளக்கம் தரவும் மத்தியஅரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், இந்தஉத்தரவுக்கும் ராணி மேரிக் கல்லூரி விவகாரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தியாவில் உள்ள 6,000 கி.மீ. நீளகடற்கரையைப் பாதுகாக்க வெளியிடப்பட்ட உத்தரவாகும்.
மேலும் இது போன்ற வழக்குகளை உயர் நீதிமன்றத்தின் பசுமை விவகார நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும். மத்திய அரசின்உத்தரவுக்கு ஒரே ஒரு நீதிபதி (நீதிபதி சதாசிவம்) இடைக்காலத் தடை விதித்தது சரியல்ல. இதனால் இடைக்காலத் தடையை உடனேநீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை வரும் செவ்வாக்கிழமை நடக்கும் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications