சென்ட் நிறுவனத்தில் விஷ வாயு கசிவு: கர்ப்பிணி உள்பட 30 பெண்கள் பாதிப்பு
சென்னை:
வாசனை திரவிய கம்பெனியில் ஏற்பட்ட ரசாயன வாயு கசிவு காரணமாக, கர்ப்பிணி உள்பட 30பெண்கள் மூச்சு திணறி மயக்கமடைந்தனர். மேலும் இருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனியார் வாசனை திரவியஙகள்(ஆரோமேடிக்ஸ்) தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந் நிறுவனத்தில் பாய்லரிலிருந்து ரசாயன வாயுகசிந்தது.
இந்த வாயு அந் நிறுவனத்துக்கு அருகே உள்ள பாம்பே பேஷன்ஸ் என்ற ரெடிமேட் ஆடைகள் தயாரிக்கும்நிறுவனத்துப் பரவியது. அதில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
அந்த நிறுவனத்துக்குப் பரவிய இந்த விஷ வாயுவை சுவாசித்த 30 பெண்கள் மயக்கமடைந்தனர்.இதில் ஒருவர் 8 மாத கர்ப்பிணியாவார். சில பெண்களுக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாம்பே பேஷன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் வெளியே ஓடினர்.
அப்போது பலர் சாலையிலேயே மயங்கி விழுந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் , மற்றும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்துமயக்கமடைந்த பெண்களை உடனடியாக அருகேயுள்ள ரோட்டரி கிளப் மருத்துவமனைக்குகொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் இரு பெண்கள் நெஞ்சுவலியும்ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வேறொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கர்ப்பிணிப் பெண்ணின் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பும் ஓரு முறை இந்த சென்ட் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து விஷ வாயு பரவியுள்ளதாகவும்,அப்போதே அதை சரி செய்யுமாறு கூறியும் அதை அந்த நிறுவனம் கண்டுகொள்ளவில்லை என்று பாம்பேபேஷன்ஸ் நிறுவனத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications