தூத்துக்குடி- கொழும்பு கப்பல் போக்குவரத்து: இந்தியா ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தூத்துக்குடி- இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்அளித்துள்ளது.

பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஒப்புதல் தரப்பட்டது. இதையடுத்துதூத்துத்துடி- கொழும்பு இடையே முதல் கப்பல் சேவை தொடங்கும்.

பின்னர் ராமேஸ்வரம்- தலைமன்னார் இடையிலும் கப்பல்கள் விடப்படும். இலங்கையில் இனப் படுகொலைகள்தொடங்கும் வரை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்து இருந்து வந்தது.

இப்போது அங்கு அமைதி திரும்பியுள்ள நிலையில் மீண்டும் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க இலங்கையின்தனியார் கப்பல் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந் நிலையில் போக்குவரத்தைத் துவங்க மத்தியஅரசின் அனுமதி எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்த அனுமதி இப்போது கிடைத்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவும் இலங்கையும் விரவிைல் ஒப்பந்தத்தில்கையெழுத்திட உள்ளன. மேலும் இந்த ஒப்பந்தத்தை அமலாக்க இரு நாட்டு அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழுவும் ஏற்படுத்தப்படவுள்ளது.

இந்தப் போக்குவரத்தால் தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எந்த நாடு நினைத்தாலும்உடனடியாக போக்குவரத்தை நிறுத்திவிடும் வகையில் ஒப்பந்தம் இருக்கும் என்று தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+