வங்கியில் ரூ. 13 லட்சம் கொள்ளையடித்த மனித வெடிகுண்டு!
பெரியகுளம்:
உடல் முழுவதும் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு வந்த மர்ம நபர், கூட்டுறவு வங்கியில் ரூ. 13லட்சம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினார்.
இந் நிலையில் ஒருவர் வங்கிக்குள் வேகமாக நுழைந்தார். வங்கியின் வாசல் கதவை உள் பக்கமாகப்பூட்டினார். அவரை ஊழியர்கள் தடுப்பதற்குள் தனது சட்டயைக் கழற்றினார்.
அவர் உடல் முழுவதும் வெடிகுண்டுகள் கட்டப்பட்டிருந்தன. இதைப் பார்த்த வங்கி ஊழியர்கள்சிதறி ஓடினர்.
பின்னர் வங்கி மேலாளர், மற்றும் ஊழியர்களை ஒரு அறைக்குள் வைத்துப் பூட்டிய அந்த நபர்கேஷியர் சுப்பிரமணியத்தை கத்தி முனையில் பணம் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் தள்ளிச்சென்றார்.
அங்கிருந்த பணக் கட்டுக்களை அள்ளிப் போட்டுக்கொண்டு சுப்பிரமணியத்தையும் அதே அறையில்வைத்துப் பூட்டிவிட்டு வங்கிக்கு வெளியே தயாராக நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில்ஏறித் தப்பிவிட்டான்.
நகைகள் இருந்த லாக்கர்களின் அவன் ஆர்வம் காட்டவில்லை. பணத்தை அள்ளுவதிலேயேகுறியாக இருந்தான். இதனால் நகைகள் தப்பிவிட்டன.
சில நிமிடங்களுக்குள் இந்தச் சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. இந்த பயங்கர கொள்ளை சம்பவம்குறித்து வங்கி மேலாளர் செல்லையா போலீஸில் புகார் கொடுத்தார்.
முன்னதாக வெளியிலும் மின் இணைப்பை அந்த மர்ம நபரே துண்டித்துவிட்டு வந்ததும்தெரியவந்தது.
மாவட்ட எஸ்.பி. அமல்ராஜ் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு, பட்டப் பகலில் துணிகரமாக நடந்துள்ள இந்தக்கொள்ளைச் சம்பவம் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications