திருச்சி அருகே ஜாதிக் கலவரம்: ஒருவர் படுகொலை
லால்குடி:
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இரண்டு பிரிவினருக்கிடையே நடந்த மோதலில் ஒருவர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.
லால்குடி அருகே உள்ளது புள்ளம்பாடி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர் ஒருவர்கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் கைதாகியிருந்த செல்வராஜ் நேற்று தான்ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தார்.
இதைத் தொடர்ந்து தியேட்டர் உரிமையாளரின் ஜாதியைச் சேர்ந்த ரவி என்பவர், செல்வராஜுடன் மோதியுள்ளார்.இதில் செல்வராஜ் அரிவாளால் வெட்டப்பட்டார்.
இதைத் தொடர்ந்து செல்வராஜின் ஜாதியைச் சேர்ந்தவர்கள் இன்று, ரவியின் சமூகத்தைச் சேர்ந்த சந்திரன் என்றசந்திரசேகரை சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து புள்ளம்பாடி கிராமத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டன.இரு சமூகத்தினரும் பயங்கரமாக மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.
தகவல் அறிந்தவுடன் மிகத் துரிதமாக செல்பட்ட காவல்துறை அங்கு போலீசாரைக் குவித்தது. மூத்தஅதிகாரிகளும் அங்கு முகாமிட்டுள்ளனர். அரிவாள், கத்தியோடு யார் நடமாடினாலும் சுட்டுக் கொல்வோம் எனபோலீசார் எச்சரித்துள்ளனர்.
மேலும் இரு சமூகத்தின் முக்கியஸ்தர்களையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதனால் அங்கு ஏற்பட இருந்த மிகப் பெரிய ஜாதிக் கலவரம் தவிர்க்கப்பட்டுள்ளது. அங்கு மேலும் ஆயுதப்போலீஸாரும் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
மாவட்ட எஸ்.பி. சாரங்கன், புள்ளம்பாடி கிராமத்திலேயே முகாமிட்டு நிலைமையை நேரில் கண்காணித்துவருகிறார். நிலைமை கட்டுக்குள் இருந்தாலும் பதற்றமாகவே உள்ளது.
இந்தக் கொலையை அடுத்து ஏற்பட்ட பதற்றம் காரணமாகவும் அடிதடி சம்பவங்கள் காரணமாகவும்திருச்சி-அரியலூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-->-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications