அயோத்தி: நிலத்தை தர முஸ்லீம்கள் தயார் என்கிறார் சங்கராச்சாரியார்- மறுக்கிறது இஸ்லாமிய சட்ட வாரியம்
டெல்லி:
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தை ராமர் கோவில் கட்டுவதற்காக வழங்க இஸ்லாமியசட்ட வாரியம் முன் வந்துள்ளதாக காஞ்சி சங்கராச்சாரியார் கூறியுள்ளார்.
ஆனால், இதை இஸ்லாமிய சட்ட வாரியம் மறுத்துள்ளது. இந்த விவகாரத்தை சங்கராச்சாரியார்திசை திருப்ப முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளது.
மடாதிபதியாகப் பட்டமேற்ற பொன்விழா கொண்டாட்டத்தையொட்டி டெல்லியில் காஞ்சிசங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது:
அயோத்திப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதையே நான் சந்தித்தஅனைத்து இஸ்லாமியத் தலைவர்களும் விரும்புகின்றனர். சுமுகத் தீர்வு காண்பதற்காக அயோத்திப்பிரச்சனையில் இருந்து அரசியல்வாதிகள் விலகியிருக்க வேண்டும்.
இடத்தை இந்து மதத் தலைவர்களிடம் ஒப்படைக்க இஸ்லாமியர் தயாராக உள்ளனர். ஆனால்அரசியல் அமைப்புகளிடம் அளிக்க அவர்கள் விரும்பவில்லை.
இந்த விவகாரத்துக்கு சுமூகத் தீர்வு காண இரு மதத்தைச் சேர்ந்தவர்களும் கூட்டாகத் தயாரிக்கும்வரைவுத் திட்டம் அடுத்த மாதம் தயாராகிவிடும்.
அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்புகள் நீங்கலாக மடாதிபதிகள் போன்ற இந்து தலைவர்கள்,அரசுடன் உடன்படிக்கை செய்துக்கொள்ள இஸ்லாமியத் தலைவர்கள் தயாராக உள்ளனர்.
அயோத்திப் பிரச்சனையில் விட்டுக்கொடுத்தால் பதிலுக்கு என்ன கிடைக்கும் என்பதே தங்கள்சமூகத்தின் கேள்வியாக இருப்பதாக இஸ்வாமியத் தலைவர்கள் கூறினர்.
இந்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான மசூதிகளை மீண்டும்தங்களிடம் ஒப்படைக்க வேணடும் என இஸ்லாமிய தலைவர்கள் கோருகின்றனர். இக் கோரிக்கைஏற்றுக்கொள்ளக் கூடியதே என்றார் ஜயேந்திரர்.
மேலும் தேசிய அளவில் நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இஸ்லாமிய சட்ட வாரியம் மறுப்பு:
அயோத்தி நிலத்தை ராமர் கோவில் கட்டுவதற்காக நாங்கள் ஒப்படைக்க முன் வந்துள்ளதாக காஞ்சிசங்கராச்சாரியார் கூறுவது தவறானது என இஸ்லாமிய சட்ட வாரியம் கூறியுள்ளது.
இந்த வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் சயீத் காசிம் ரசூல் இலியாஸ் இன்று ஹைதராபாத்தில் நிருபர்களிடம்பேசுகையில்,
இது போன்ற உறுதிமொழியை முக்கியமான இஸ்லாமிய அமைப்பு ஏதும் தரவில்லை. இந்த விவகாரத்தில்நீதிமன்றத்தின் தீர்ப்பை இஸ்லாமியர்கள் ஏற்பார்கள். நீதிமன்றத்துக்கு மட்டுமே கட்டுப்படுவோம். மற்றபடியாருடைய உத்தரவுகளையும் ஏற்க மாட்டோம்.
நீதிமன்றத்தின் உத்தரவை ராமர் கோவில் அறக்கட்டளையும் மதித்து நடக்க முன் வர வேண்டும்.
4 மாநிலங்களுக்குத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் ஒரு அரசியல் கட்சிக்கு சாதகமாக சங்கராச்சாரியார்செயல்படுவது அவர் இருந்து வரும் பீடத்துக்கு அழகல்ல என்றார்.
அகழ்வாராய்ச்சி தொடரும்: உச்ச நீதிமன்றம்
இதற்கிடையே அயோத்தியில் மசூதி இருந்த இடத்துக்குக் கீழே கோவில் இருந்ததா என்பதைக் கண்டுபிடிக்கும்அழ்வாராய்ச்சிப் பணிக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்றுநிராகரித்தது. அங்கு அகழ்வ்ராய்ச்சிப் பணி தொடரும் என்று அறிவித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications