ஈராக்குக்கு இந்தியப் படை: புஷ்ஷிடம் அத்வானி உறுதி
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சை துணை பிரதமர் அத்வானி வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார்.
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதம் , ஈராக் அமைதிப் பணிக்கு இந்தியப் படைகளை அனுப்புவதுஆகியவை குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
அரை மணி நேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் பிற சர்வதேச விவகாரங்கள் குறித்தும்ஆலோசிக்கப்பட்டதாக கூட்டத்திற்குப் பின் அத்வானி நிருபர்களிடம் கூறினார்.
அவர் கூறியதாவது: ஈராக் அமைதி காக்கும் பணியில் அமெரிக்காவுடன் சேர்ந்து இந்தியப் படைகளையும்ஈடுபடுத்துவது குறித்து மத்திய அமைச்சரவையில் இருமுறை ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும்ஆலோசனை நடத்த அமெரிக்கக் குழுவை புஷ் இந்தியா அனுப்ப உள்ளார்.
பாகிஸ்தானுடன் அமைதியை ஏற்படுத்த பிரதமர் வாஜ்பாய் எடுத்து வரும் நடவடிக்கைகளை புஷ் வெகுவாகப்பாராட்டினார்.
இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்கள் குறித்தும் அதிபர் புஷ்சுடன்பேசினேன். விரைவில் புஷ் இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்றார் அத்வானி.
புஷ்ஷை அத்வானி சந்தித்தபோது இந்திய உளவுத்துறையின் (ஐ.பி) தலைவர் கே.பி.சிங்கும், உள்துறை செயலாளர்கோபாலசாமியும் உடனிருந்தனர்.
அமெரிக்க அதிபரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் காண்டலீஸ்ஸா ரைஸ்சையும் அத்வானி சந்தித்துப் பேசினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications