தலைமறைவான மாஜி திமுக அமைச்சருக்கு முன் ஜாமீன் மறுப்பு
சென்னை:
பொதுக் கூட்டத்தில் பட்டாசு வெடித்து அப்பாவி வாலிபர் ஒருவர் இறந்தது தொடர்பான வழக்கில் முன் ஜாமீன்கோரி முன்னாள் திமுக அமைச்சர் முல்லைவேந்தன் உள்ளிட்ட 3 பேர் தாக்கல் செய்த மனுவை சென்னைஉயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந்தக் பொதுக் கூட்டத்தின்போது திமுகவினர் அதிக சக்தி வாய்ந்த பட்டாசுகளை கூட்டத்துக்குள் வெடித்தனர்.இதில் கூட்டத்தை வேடிக்கைப் பார்க்கப் போன தஸ்தகீர் என்ற வாலிபர் உடல் சிதறி இறந்தார்.
இதையடுத்து முல்லைவேந்தன் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆனால், முல்லைவேந்தன் தரப்பில் காவல் நிலையத்தில் ஒரு புகார் தரப்பட்டது. அதில் எங்களைக் கொல்லஅதிமுகவினர் கூட்டத்தில் குண்டு வைத்தனர் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால், தன் போலீசார் வழக்குப் போட்டுவிட்டதால் கைதாகாமல் தப்புவதற்காக முல்லைவேந்தன்தலைமறைவாகிவிட்டார். அவரது ஆதரவாளர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர்.
தங்களை போலீஸார் கைது செய்யக் கூடும் என்பதால், முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்முல்லைவேந்தன் உள்ளிட்ட 3 பேரும் மனுத் தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி, மனுதாரர்கள் பட்டாசு வெடித்த சம்பவத்தை, எதிர்க் கட்சியினர் தங்களைக்கொல்ல திட்டமிட்டிருந்ததாக போலீஸாருக்குத் தவறான தகவலைக் கொடுத்துள்ளனர்.
எனவே அவர்களது முன் ஜாமீன் நிராகக்கப்படுகிறது என்று கூறி தள்ளுபடி செய்தார். இதையடுத்துமுல்லைவேந்தன் போலீசாரிடம் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications