தா.கி. கொலை: அழகிரி வீட்டில் 13ம் தேதி போலீஸ் சோதனை
சென்னை:
தா.கிருட்டிணன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அழகிரியின் தீவிரஆதரவாளர்களான எஸ்.ஆர்.கோபி, மன்னன் ஆகியோரது வீடுகளில் போலீஸார் சோதனைநடத்தினர்.
மன்னன், கோபி ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்த மதுரை 6-வது குற்றவியல் நீதீமன்றமாஜிஸ்திரேட் வனிதா போலீசாருக்கு அனுமதி அளித்தார். இதைத் தொடர்ந்து மன்னன், கோபிஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
கோபியின் வீடு வில்லாபுரம் கணபதிபுரத்தில் உள்ளது. இந்த வீட்டில் போலீஸர் காலை முதல் உதவிஆணையர் ஹேமா தலைமையிலான போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனையின்போது மதுரை தாசில்தார் மற்றும் கோபியின் குடும்பத்தினர் உடன் இருந்தனர். அதேபோல மன்னனின் வீட்டில் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் முருகேசன்தலைமையிலான போலீசார் சோதனை நடந்தினர்.
அழகிரி மனைவியிடம் சம்மன் ஒப்படைப்பு:
அதே போல மு.க.அழகிரி வீட்டிலும் அவரது மனைவி காந்தி முன்னிலையில் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதிஅளித்துள்ளது. இதைத் தொடர்ந்து உடனே மதுரைக்கு வருமாறு அவருக்கு போலீசார் தகவல் அனுப்பினர்.இப்போது அவர் சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டில் உள்ளார்.
நீதிமன்ற விதிகளின்படி இந்தச் சம்மனை மதுரை போலீசார் நேரில் காந்தியிடம் தர வேண்டுமாம். இதையடுத்துஇன்ஸ்பெக்டர் முத்துசங்கரலிங்கம் தலைமையிலான மதுரை போலீஸ் படை சம்மனுடன் சென்னை விரைந்தது.கருணாநிதியின் வீட்டில் தங்கியிருக்கும் அழகிரியின் மனைவி காந்தியிடம் ஒப்படைத்தனர்.
காந்தியிடம் கையெழுத்தும் பெற்றுக் கொண்டனர். 13ம் தேதி காலை மதுரை வீட்டில் இருக்குமாறும், சோதனைக்குஒத்துழைக்குமாறும் சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காந்தி தவிர, தாசில்தார் அல்லது அவருக்கு மேல் உள்ள அதிகாரியின் முன்னிலையில் தான் மதுரை சத்யசாய்நகரில் உள்ள அழகிரியின் வீட்டில் சோதனை நடைபெற வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அழகிரி- ஆற்காடு சந்திப்பு:
இதற்கிடையே திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அழகியை, திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமிஇன்று சந்தித்து நலம் விசாத்தார். அவருடன் அழகிரியின் தாய்மாமனான டைரக்டர் அமிர்தம், பரணிகுமார்எம்.எல்.ஏ. ஆகியோரும் சென்றனர்.
திமுகவின் உயர் மட்டத் தலைவர் ஒருவர் அழகிரியை சிறையில் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
4 திமுகவினருக்கு காவல் நீட்டிப்பு
இதற்கிடையே தா.கிருட்டிணன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முபாரக் மந்தி, பி.எம்.மன்னன்,எஸ்.ஆர்.கோபி, கராத்தே சிவா ஆகியோரது சிறைக் காவல் இந்த மாதம் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கடந்த 4 நாட்களாக போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இந் நிலையில் இவர்களது காவல் இன்றுடன் முடிவடைவதால் மதுரை 6-வது குற்றவியல் நீதிபதி வனிதா முன்ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களது காவலை வரும் 25ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மீண்டும் மதுரை மத்தியசிறையில் அடைக்கப்பட்டனர்.
எஸ்.ஆர்.கோபியின் வில்லாபுரம் வீட்டில் போலீஸார் இன்றும் சோதனை நிடத்தி வருகின்றனர். உதவி ஆணையர்ஹேமா பிரமீளா தலைமையிலான போலீஸ் படை சோதனை நிடத்துகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications