விபச்சாரம்: 2 கேரள துணை நடிகைள், "கஸ்டமர்கள்" கைது!
சென்னை:
சென்னையில் வாடகை வீட்டில் விபச்சாரம் செய்த மலையாள திரையுலகைச் சேர்ந்த 2 துணைநடிகைகள், அவர்களுடன் ஜாலியாக இருக்க வந்த 6 வாடிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
அப்போது 2 கேரள துணை நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
வாடிக்கையாளர்கள் போல வேடமிட்டு சென்ற போலீஸார் டோலி, ரமா என்ற ரமாதேவி ஆகிய இருதுணை நடிகைளையும் கைது செய்தனர். ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1,000 என்ற விகிதத்தில் இவர்கள்வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலித்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு புரோக்கராக செயல்பட்டு வந்த மதுரையைச் சேர்ந்த காசிநாதன் என்பவரும்பிடிபட்டார். இவர்தான் வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சாரம் நடத்தி வந்துள்ளார்.
கேரளத்தைச் சேர்ந்த துணை நடிகைகளிடம் ஜாலியாக இருக்க வந்த ரமேஷ், கிருஷ்ணன்,சிவக்குமார், முரளி, பிரசாத், குமார் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications