வாஜ்பாய்- அத்வானி சண்டை: நோ-கமெண்ட்ஸ்- ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நான்கு வட மாநில சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் முடிந்த பின் தேசிய அளவில் மூன்றாவதுஅணி அமைப்பது குறித்து முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்துவார்கள் என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறினார்.

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங்கை சந்தித்து, தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தவிரும்பினேன். ஆனால், அவரே தமிழ்நாடு இல்லம் வந்து என்னைச் சந்திக்க விருப்பம்தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் அரசியல் முக்கியதுவம் ஏதும் இல்லை.

நாங்கள் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை. நிதி, திட்டங்கள் குறித்துத் தான் பேசினோம்.

தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறி அதைஇப்போது நிராகரிக்க முடியாது. ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நான்கு மாநிலசட்டப்பேரவைத் தேர்தல்களுக்குப் பிறகுதான் மூன்றாவது அணி குறித்து தேசிய கட்சிகள்தலைவர்கள் சிந்திக்கவும், பேசவும் துவங்குவார்கள்.

முக்கிய கட்சிகளின் தலைவர்களை அடிக்கடி சந்தித்துப் பேசி வருகிறேன். நான்கு மாநில பேரவைத்தேர்தல்களில் நான் யாருக்கும் பிரசாரம் செய்யப் போக மாட்டேன்.

மத்தியில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதைத்தான் கவனிப்போம். அதிமுகவைப்பொருத்தவரை, யாரையும் நெருங்கிச் செல்லவில்லை. முதலில் எங்கு இருந்தோமோ அங்கேதான்இருக்கிறோம்.

தமிழகத்தில் ஒரே ஒரு அணிதான் இருக்கிறது. அதுதான் அதிமுக அணி. இந்த அணியைத் தவிர எந்தஅணிக்கும் மக்கள் ஆதரவு தர மாட்டார்கள். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் நடந்த ஐந்துசட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

அமைச்சரவையை 11 முறை மாற்றியமைத்திருப்பதால் நிர்வாகப் பணிகள் அதும்பாதிக்கப்படவில்லை. தமிழகத்தில் சிறப்பான நிர்வாகம் நடக்கிறது. மத்திய நிதியமைச்சரும், திட்டக்குழுவும் இதைப் பாராட்டியிருக்கிறார்கள்.

காங்கிரஸ் தலைவர் சோனியாவைப் பற்றி ஏற்கனவே நான் தெரிவித்த கருத்துகளில் இன்னும்உறுதியாக இருக்கிறேன் என்றார் ஜெயலலிதா.

ஆனால், பிரதமர் வாஜ்பாய் துணைப் பிரதமர் அத்வானி ஆகியோருக்கு இடையே நிலவும் அதிகாரமோதல் குறித்துக் கேட்டபோது நோ-கமெண்ட்ஸ் என்று கூறி நிருபர்கள் சந்திப்பை முடித்துக்கொண்டார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+