வறண்டது மேட்டூர்... வாட்டத்தில் தமிழகம்
மேட்டூர்:
இன்று ஜூன் 12. இது காவிரி டெல்டா விவசாயிகளுக்கு பசிக்கும் உணவுக்கும் இடையிலான தேதி.
| காவிரிப் பாசனத்துக்காக இந்த தினத்தில் ஆண்டுதோறும் மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். காவிரிக்கரையில் நின்று தண்ணீர் வருவதை ஒவ்வொரு விவசாயியும் ஆனந்தக் கூச்சலுடன் வரவேற்பான். |
கடந்த ஆண்டு கர்நாடகம் செய்த சதியாலும், வானம் பொய்த்ததாலும் காவிரியில் சம்பா, குறுவை, தாளடி எனஅடுத்தடுத்த நெல் சாகுபடிக்கு சாவு மணி விழுந்தது. இதனால் ஊருக்கெல்லாம் சோறு போட்ட விவசாயிகள்குடும்பம் குடும்பமாய் பசியாய் வாடினார்கள். பட்டினிச் சாவுகளும் தற்கொலைகளும் நடந்தன.
சோறு இல்லாமல் எலியையும் நண்டையும் பிடித்துச் சாப்பிடும் அவல நிலைக்கு தஞ்சாவூர், நாகப்பட்டிணம்,கடலூர், திருச்சி மண்டல காவிரிப் பாசன விவசாயிகள் தள்ளப்பட்டனர். இதனால் கூட்டம் கூட்டமாக ஊர்களைக்காலி செய்து கொண்டு ஆந்திராவுக்கும் கேரளத்துக்கும் கூலி வேலை தேடிப் போய்விட்டனர்.
இந் நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 1,000 வழங்க முன் வந்தது அரசு. இதனால் நிலம்வைத்திருந்த விவசாயிகளுக்கு ஏதோ கொஞ்சம் பணம் கிடைத்தது. ஆனால், விவசாயத்தை நம்பி வாழ்ந்து வரும்நிலமற்ற ஏழை விவசாயக் கூலிகளுக்கு ஏதும் கிடைக்கவில்லை.
அவர்களுக்கு வேலைக்கு உணவு திட்டம் அமலாக்கப்பட்டது. குளம், குட்டைகளைத் தூர் வாரும் வேலைகள்தரப்பட்டன. ஒரு நாளைக்கு ரூ. 20 ஊதியமும் 2 கிலோ அரிசியும் தரப்பட்டது. ஆனால், இதிலும் பாழாய்ப் போனஅரசியல் புகுந்து வேண்டியோர், வேண்டாதோர் என விவசாயிகள் பிரிக்கப்பட்டு வேலைகள் தரப்பட்டன.
இதனால் மிகச் சிறிய சதவீத விவசாயிகள் தான் பயனடைந்து வருகின்றனர். மற்றவர்கள் வேலைக்காக திரும்பவும்ஆந்திரா, கேரளாவுக்குப் போய்விட்டனர். இந் நிலையில் ஜூன் நெருங்கியது.
| வழக்கமாக காவிரி டெல்டாப் பகுதி விவசாயத்திற்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர்திறந்து விடப்படுவது மரபாகையால் விவசாயக் குடும்பங்கள் எப்படியாவது நீர் வந்துவிடும் என நம்பி டெல்டாபகுதிகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர். |
இப்போது மேட்டூர் அணை காய்ந்து போய் வெறும் பாறையும் மண்ணுமாக உள்ளது. குட்டை போல ஆங்காங்கேகொஞ்சம் நீர் தேங்கியுள்ளது. இந்த சிறிய நீர் தேக்கங்ளைச் சுற்றி அந்தப் பகுதி விவசாயிகள் சோளம்பயிரிடப்பட்டுள்ளனர்.
இதனால் நீர் நிரம்பியிருக்க வேண்டிய அணைக்கட்டின் பெரும்பாலான பகுதி பாறையும் மண்ணாகவும் சிறியபகுதியில் சோளமும் விளைந்து கிடக்கிறது.
பருவமழையும் பொய்த்து விட்ட நிலையில, கர்நாடகம் தன்னிடம் தண்ணீர் இல்லை என்று கூறி விட்டது. இதனால்ஜூன் 12ம் தேதியான இன்று திறக்கப்பட வேண்டிய அணை திறக்கப்படவில்லை.
| இதனால் காவிரி டெல்டாவில் பெரும் துயரம் சூழ்ந்து கொண்டுள்ளது. பருவ மழை பெய்தால் மட்டுமேஇப்பகுதியில் விவசாய் சாத்தியம் என்ற நிலை உருவாகியுள்ளது. இந் நிலையில் காவிரி தொடர்பான வழக்கை விரைவுப்படுத்த தமிழகத்தின் தரப்பில் எந்த நடவடிக்கையும்எடுக்கப்படாதது விவசாயிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. |
|
இதனால் காவிரி விவகாரத்தில் கர்நடாக முதல்வர் கிருஷ்ணாவுக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையேஏதோ ஒரு உடன்பாடு ஏற்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகமும் பரவியுள்ளது.
மொத்தத்தில் காவிரி டெல்டா விவசாயிக்கு இந்த ஆண்டும் பசியும் கண்ணீரும் தான் மிஞ்சுமோ என்பதைநினைத்தால் உள்ளம் பதைபதைக்கிறது.















Click it and Unblock the Notifications