கலாம் சென்னை வரும்போது குண்டு வைக்க சதி: 12 தமிழர் விடுதலைப் படையினர் கைது
பெரம்பலூர்:
தங்களது இயக்கத்துக்கு அரசு தடை விதித்ததால், அதை எதிர்த்து தண்டவாளத்தைத் தகர்த்து ரயிலை கவிழ்க்கும்முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி தமிழர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது தவிர நாளை மறுதினம் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சென்னை வரும்போது சென்னையில் குண்டுகளைவெடிக்க வைத்து பரபரப்பை ஏற்படுத்தவும் இவர்கள் திட்டமிட்டிருந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
சமீபத்தில் தான் இந்த அமைப்பை தமிழக அரசு தடை செய்தது. இந் நிலையில் பெண்ணாடம் அருகே இந்தஇயக்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், சேகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் ஆர்.எஸ்.மாத்தூர் ரயில் நிலையத்தில் குண்டு வைக்க சதித் திட்டம் தீட்டியிருந்ததாகவும்அவர்களிடமிருந்து டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்தாகவும் போலீசார்தெரிவித்தனர்.
இவர்கள் கொடுத்த தகவலை வைத்து அமைப்பின் முக்கிய தலைவர்களான தமிழ்ச் செல்வன், குலசேகரன்ஆகியோர் உள்பட மேலும் 10 பேர் பிடிபட்டசாதவும் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும்தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வரும் 18ம் தேதி சென்னைக்கு வரும்போது, நகரின் பல்வேறு இடங்களில்வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து பரபரப்பை ஏற்படுத்த இவர்கள் சதித் திட்டம் தீட்டியிருந்தாகவும், இக்கும்பல்பிடிபட்டு விட்டதால்,பெரும் சதித் திட்டம் தடுக்கப்பட்டிருப்பதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.
தொடர்ந்து இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த இயக்கத்தின் தலைவர் சுப. இளவரசனை தேடும் பணிமுடுக்கி விடப்பட்டுள்ளது. சுப. இளவரசனைப் பிடிக்க போலீஸ் தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர வேட்டைநடந்து வருகிறது. அவரை சுட்டுப் பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஆறு எஸ்.ஐ.க்கள் தலைமையில் போலீஸார் ஐந்து தனி குழுக்களாக பிரிந்து தேடுதல்வேட்டை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் தேன்மொழி தலைமையில் இந்தத் தேடுதல் வேட்டைநடக்கிறது. பெரம்பலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் உள்ள முந்திரிக் காடுகளில் அவர் மறைந்திருக்கலாம்என்று போலீஸார் கருதுகிறார்கள்.
இதனால் செந்துறை, உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி, குவாகம், தளவாய், ஆண்டிமடம் பகுதிகளில் உள்ளமுந்திரி காடுகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications