சிறையில் அழகிரி-கருணாநிதி சந்திப்பு: தனியாக பேச விடாமல் போலீஸ் தடுத்தது
திருச்சி:
திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை திருச்சி சிறையில் மு.க.அழகியை சந்தித்துப் பேசினார். ஆனால்,இருவரும் பேசியபோது போலீசாரும் உடன் இருந்தனர். அவர்கள் தனியே பேச அனுமதி மறுக்கப்பட்டது.
| தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகியுள்ள அழகிரி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவரை கருணாநிதியின் குடும்பத்தினர் பெரும்பாலானோர் பலமுறை சந்தித்துவிட்டனர். ஆனால், கருணாநிதிமட்டும் பார்க்காமல் இருந்து வந்தார்.
இந் நிலையில் நேற்று மாலை கருணாநிதி சென்னையிலிருந்து கார் மூலம் திருச்சிக்குக் கிளம்பினார். திருச்சியில்அவரை முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தலைமையிலான திமுகவினர் வரவேற்றனர். பின்னர் இரவு சங்கம்ஹோட்டலில் கருணாநிதி தங்கினார். இன்று காலை 10.00 மணிக்கு சிறைச் சாலைக்கு வந்தார். |
|
கருப்பு பூனைப் படை- போலீஸ் மோதல்:
கருணாநிதியின் வருவதையொட்டி சிறைப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அழகிரியைச் சந்திக்ககருணாநிதி சிறைச்சாலைக்குள் சென்றபோது அவரது பாதுகாப்புக்கு இருக்கும் கறுப்புப் பூனைப் படையினரைபோலீசார் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். அவர்களது காரைத் தடுத்து நிறுத்தினர்.
இதனால் கருப்புப் பூனைப் படையினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. கேட்டைஇடித்துக் கொண்டு கார் உள்ளே செல்லும் என்று கருப்புப் பூனைப் படையினர் எச்சரித்த பின்னரே போலீசார்அந்தக் கார் உள்ளே செல்ல அனுமதித்தனர்.
இதே போல கருணாநிதியின் டாக்டரையும் போலீசார் சிறை வாசலிலேயே தடுத்து நிறுத்திவிட்டனர்.
இதன் பின்னர் கருணாநிதிக்கு சிறைக்குள் சென்றார். அங்கு அழகிரியுடன் 10.05 மணி முதல் 10.40 மணி வரைசந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். கருணாநிதியுடன் முரசொலி செல்வம், மு.க. முத்து, அழகிரியின் மகன் அறிவுநிதிஆகியோரும் சென்றனர்.
தனியே பேச விடவில்லை:
10.45 மணிக்கு கருணாநிதி வெளியே வந்தார். அப்போது நிருபர்களிடம் அவர் பேசுகையில், அழகிரி மீது போடப்பட்டுள்ளதுபொய்யான வழக்கு. திமுக அழிக்க வேண்டும் என்பதற்காக அவரை சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் அழகிரிக்கு அடிப்படைவசதிகள் கூட செய்து தரப்படவில்லை.
முதல் வகுப்பு கூட தரப்படவில்லை. தனியாக அழகிரியுடன் பேச அனுமதிக்கவில்லை. போலீஸாரும் உடன் இருந்தார்கள்.
தா.கி. கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோருவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.இந்தப் படுகொலை தொடர்பாகவிசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது வியப்பைத் தருகிறது. இதுகுறித்து திமுகவழக்கறிஞர்கள், நீதிமன்ற கவனத்துக்கு எடுத்துச் செல்வார்கள்.
தா.கியை இழந்த துக்கத்தோடு நான் வேதனைப்படும்போது அழகிரியைக் கைது செய்து எனக்கும் என் குடும்பத்தினருக்கும் ஆளும்கட்சியினர் பெரும் துயரம் தந்துள்ளனர். தா.கி. கொலைக்கு பல காரணங்கள் இருக்கலாம் என்று கருத்து சொன்னதால் மதுரைகமிஷ்னரை அரசு மாற்றிவிட்டது என்றார் கருணாநிதி.
சங்கராச்சாரியார் பெரியவாள்:
முன்னதாக சங்கம் ஹோட்டலில் நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
50 ஆண்டுகளுக்கு முன் கல்லக்குடி போராட்டத்தில் கைதாகி நான் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டேன். அப்போது கைக்குழந்தையாக இருந்த அழகிரியைத் தூக்கிக் கொண்டு என் மனைவி தயாளு சிறையில் என்னைக் காண வந்தார். இன்று அதேசிறைக்கு அழகிரியைக் காண நான் வந்திருக்கிறேன்.
நதிகள் இணைப்புக்கு பிகார், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது சரியல்ல. நதிகள் இணைப்பு என்பதுமாநில விஷயமே அல்ல. அது தேசிய நலன் தொடர்பான விஷயம்.
இதனால் சில மாநிலங்கள் எதிர்ப்பதாகச் சொல்லி இத் திட்டத்தை கைவிடுவது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது.நதிகள் இணைப்பு தடுக்கப்படுவது தேசிய நலனுக்கு எதிரானது.
கங்கையையும் காவிரியையும் இணைக்காவிட்டாலும் கூட பரவாயில்லை, பக்கத்தில் உள்ள நதிகளை கட்டாயம் இணைத்தே ஆகவேண்டும்.
மத்திய அமைச்சர்கள் ஜஸ்வந்த் சிங்கும், ஜார்ஜ் பெர்னாணடசும் சென்னை வழியாக காஞ்சிபுரம் சென்று சங்கராச்சாரியாரைச்சந்தித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். என்னை சந்திக்கவில்லையே ஏன் என்று கேட்கிறார்கள். என்னை விட சங்கராச்சாரியார்அவர்களுக்கு பெரியவாள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் திமுகவின் உறவு தொடரும். மாநிலத்தில் பா.ஜ.கவுடன் எந்த உறவும் இல்லை. முரசொலிமாறனின் உடல் நிலை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தேறவில்லை.
அரசு ஊழியர்களின் போராட்டம் நியாயமனது. புதிய கோரிக்கைகளுக்காக அவர்கள் போராடவில்லை. இருந்த சலுகைகளைஇழந்து விட்டு அதை மீட்க போராடுகிறார்கள். அவர்களது போராட்டத்திற்கு திமுக உறுதியான ஆதரவு அளிக்கும் என்றார்கருணாநிதி.













Click it and Unblock the Notifications