தூத்துக்குடி அருகே நான்கு மாணவிகள் மாயம்
தூத்துக்குடி:
| தூத்துக்குடி அருகே நான்கு பள்ளி மாணவிகளைக் காணவில்லை. இவர்கள் கடத்திச் செல்லப்பட்டார்களா அல்லதுவீட்டை விட்டு ஓடிவிட்டார்களா என்று தெரியவில்லை.
தூத்துக்குடியை அடுத்த புதியபுத்தூரைச் சேர்ந்த செல்வி (வயது 15), ஜோதி (வயது 15), வனிதா (வயது 15), கீதா(வயது 16) ஆகிய 4 பேரும் அதே ஊரில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். இதில் கீதா பிளஸ் ஒன், செல்வி 10ம்வகுப்பு, வனிதா, ஜோதி ஆகியோர் 9ம் வகுப்பும் படித்து வந்தனர். நெருங்கிய தோழிகளான இவர்கள் கடந்த 20ம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பவில்லை. |
|
| இதன் பின்னர் தான் நான்கு பேருமே சேர்ந்து மாயமானது தெரிய வந்தது. இதையடுத்து நால்வரின் பெற்றோரும்நேற்று தான் போலீசில் புகார் தந்தனர். இரு நாட்களாக தங்களிடம் இருந்து இத் தகவலை மறைத்த பெற்றோரைபோலீசார் கடுமையாகக் கண்டித்தனர்.
மாநிலம் முழுவதும் போலீசாருக்குத் தகவல் தரப்பட்டது. இப்போது இவர்களைத் தேட தனிப் படைகள்அமைக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் வனிதாவின் பக்கத்துக்கு வீட்டுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய வனிதா,நாங்கள் மதுரையில் இருக்கிறோம் என்று தகவல் தந்துள்ளார். |
| ஆனால், ஜோதி தனது பக்கத்து வீட்டுக்கு போன் செய்து திருப்பூரில் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
3 தினங்களுக்கு முன்பு தான் நால்வருமே ஸ்கூலுக்கு பீஸ் கட்ட வீட்டிலிருந்து பணம் வாங்கியுள்ளனர். இதனால்இவர்கள் வீட்டிலிருந்து தப்பியோடி, திரும்ப வரப் பிடிக்காமல் தவறான தகவல்களை அளித்து வருவதாக அந்தஊர் மக்கள் கூறுகின்றனர். மேலும் இந்த நால்வரையும் சேர்த்து ஒட்டப்பிடாரம் பஸ் நிலையத்தில் சிலர் பார்த்துள்ளதாகவும்தெரிவித்துள்ளனர். |
|
| ஆனால், இவர்களை யாரோ ஆசை காட்டியோ மிரட்டியோ கடத்திச் சென்று வைத்துக் கொண்டு, அவர்களைமேலும் மிரட்டியே தவறான தகவல்களைத் தரச் செய்து வருவதாக இவர்களின் பெற்றோர் கூறுகின்றனர்.
இதில் ஜோதி 9ம் தேதி தோல்வியடைந்து ஒருமுறை தற்கொலைக்கும் முயன்றவராம். இவர்கள் வீட்டை விட்டுஓடிவிட்டதாகவே போலீசார் கருதுகின்றனர். தேடுதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது. |
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!
















Click it and Unblock the Notifications