"சரவண பவன்" அண்ணாச்சி ராஜகோபால் மீது பெண் கடத்தல் குற்றச்சாட்டு பதிவு
சென்னை:
ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால், உள்ளிட்ட 13 பேர் மீது இளம் பெண்ணைக் கடத்தி கட்டாயக்கல்யாணம் செய்ய முயன்றதாக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சரவண பவன் அதிபர் ராஜகோபால், ஏற்கனவே, தனது ஹோட்டலில் முறுக்கு சுற்ற வந்த கிருத்திகா என்றபெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டவர். இந்தப் பெண் ஹோட்டல் ஊழியரின் மனைவியாகஇருந்தவர்.
இந் நிலையில் தான். தனது ஹோட்டலில் வேலை பார்த்து வந்த மேலாளர் ராமசாமியின் மகளான ஜீவஜோதி மீதுகாதல் கொண்டார். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு நிதியுதவி செய்து ஜீவஜோதியை மடக்கினார்.
இதற்குத் தடையாக இருந்த அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை ராஜகோபாலின் ஆட்கள், கடத்திச் சென்றுகொடைக்கானல் மலையில் தள்ளிக் கொலை செய்தனர். இதுதொடர்பாக ஒரு வழக்கு ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டு விசாரணையில் இருக்கிறது.
இந் நிலையில், ஜீவஜோதியைக் கடத்திச் சென்று கல்யாணம் செய்து கொள்ள முயன்றதாக மற்றொரு வழக்கு,சென்னை மகளிர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணை ஜூலை 21ம் தேதி நடக்கும் என்று நீதிபதி விமலா அறிவித்தார்.
குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டபோது ராஜகோபால் உள்ளிட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.
இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளான ஜீவஜோதி, அவரது தந்தை ராமசாமி, தாயார் தவமணி, சகோதரர் ராம்குமார்மற்றும் ரேவதி என்ற பெண் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையே ஜீவஜோதிக்கும் அண்ணாச்சிக்கும் இடையே மீண்டும் நட்புறவு துளிர்க்க ஆரம்பித்துவிட்டதாகவும்தகவல்கள் வருகின்றன.












Click it and Unblock the Notifications